Published on 15/12/2018 | Edited on 15/12/2018
உத்திர பிரதேச அரசு அந்த மாநிலத்தில் புதிதாக 4 சிலைகள் நிறுவ முடிவு செய்துள்ளது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு 25 அடி உயர சிலையும், விவேகானந்தர் சிலையும் உ.பி சட்டமன்ற வளாகத்தில் நிறுவப்படவுள்ளது. மேலும் கோவில் மடாதிபதிகளான அவைத்யநாத், திக்விஜயநாத் ஆகியோருக்கு 12.5 அடி உயரத்திலும் சிலை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பினை விமர்சித்துள்ள அகிலேஷ் யாதவ், சிலைகள் அமைப்பதில் கவனம் செலுத்துவதை விடுத்து, மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தில் கவனம் செலுத்துங்கள் என யோகி ஆதித்யநாத்தை கடுமையாக விமர்சித்தார்.