Published on 28/01/2019 | Edited on 28/01/2019

கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து நஷ்டத்தை மட்டுமே சந்தித்து வரும் ஏர் இந்தியா நிறுவனம் 55,000 கோடி ரூபாய் கடனில் சிக்கி தவிக்கிறது. இந்த கடனை அடைக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால், எந்த முயற்சியும் பலன் தரவில்லை. ஏற்கனவே துணை மானியக் கோரிக்கையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் கடன் சுமையை சீரமைக்க ரூ. 2,345 கோடியை ஒதுக்கீடு செய்ய நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்திருந்தது. அதனையடுத்து முதல் கட்டமாக அடுத்த வாரம், ரூ. 1,500 கோடியை விடுவிக்கப்போவதாக மத்திய விமானத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.