உத்தரப்பிரதேச மாநிலத்தில் வரும் பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் மார்ச் 7 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தநிலையில் அக்கட்சியை சேர்ந்த சுவாமி பிரசாத் மௌரியா, தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சமாஜ்வாடி கட்சியில் இணைந்தார்.
இந்தநிலையில் சுவாமி பிரசாத் மௌரியாவை தொடர்ந்து மூன்று பாஜக எம்.எல்.ஏக்களும் கட்சியில் இருந்து விலகியுள்ளனர். பல எம்.எல்.ஏக்கள் கட்சியை விட்டு விலகுவார்கள் என சுவாமி பிரசாத் மௌரியா கூறிய நிலையில், அவரைத்தொடர்ந்து மூன்று பாஜக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துள்ளது பாஜகவிற்கு அதிர்ச்சியாக அமைந்துள்ளது. ஒரேநாளில் அமைச்சர் உட்பட நான்கு எம்.எல்.ஏக்கள் பாஜகவிலிருந்து விலகியுள்ளது உத்தரப்பிரதேச அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
பாஜகவிலிருந்து விலகியுள்ள மூன்று எம்.எல்.ஏக்களும் சமாஜ்வாடி கட்சியில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் சில உத்தரப்பிரதேச அமைச்சர்களும் சமாஜ்வாடி கட்சியின் இணையவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.