Published on 12/05/2018 | Edited on 12/05/2018
பல முக்கிய முக்கிய வழக்குகளையும், திருப்புமுனை விசாரணைகளையும் விசாரித்தவருமான ஹிமான்ஷூ ராய் நேற்று மதியம் தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார்.

மும்பையில் ஏ.டி.ஜிபி.யாக பணியாற்றியவர், அவருக்கு வயது 51. நீண்ட நாட்களாக புற்றுநோயால் அவதிப்பட்டுவந்த அவர் அதற்கான சிகிச்சையை தொடர்ந்து எடுத்துகொண்டு வந்தார். இந்நிலையில் நேற்று மதியம் வீட்டிலிருந்தபோது தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
வழக்கறிஞர் பல்லவி கொலை, பத்திரிகையாளர் ஜே டே கொலை வழக்கு, 2013ம் ஆண்டு நடந்த ஐ.பி.எல். சூதாட்ட முறைகேடுகள் உள்ளிட்ட பல முக்கியமான வழக்குகளை விசாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.