ஹரியானா மாநிலம், ஹிசார் மாவட்டத்தில் உள்ள புதானா கிராமத்தில் செங்கல் சூளை ஒன்று இயங்கி வருகிறது. இந்த சூளையில் 25க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், நேற்று இரவு செங்கல் சூளையின் சுவர் அருகே குழந்தைகள் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, அந்த சுவர் திடீரென்று இடிந்து, குழந்தைகள் மீது விழுந்துள்ளது. இதில், உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளான சுரேஷ் விவேக்(9), நந்தினி(5), சூரஜ்(9) மற்றும் பிறந்து மூன்று மாதங்களே ஆன நிஷா, ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் படுகாயமடைந்த கவுரி(5) என்ற சிறுமி, அருகில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுவர் இடிந்து 4 குழந்தைகள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.