Published on 05/09/2020 | Edited on 05/09/2020
நாடுமுழுவதும் அறிவிக்கப்பட்டிருந்த கரோனா பொதுமுடக்கத்தில் பல்வேறு தளர்வுகளை மத்திய அரசு அறிவித்து வரும் நிலையியல், நாடு முழுவதும் வரும் 12 ஆம் தேதி முதல் கூடுதலாக 80 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.
கூடுதலாக இயக்கப்படும் இந்தச் சிறப்பு ரயில்களுக்கு முன்பதிவு செப்டம்பர் 10 ஆம் தேதி தொடங்கும் எனவும் ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. அதேபோல் மாநில அரசு கேட்டுக் கொண்டால் அந்தந்த மாநிலத்தில் கூடுதல் ரயில்கள் இயக்க அனுமதி வழங்கப்படும். மேலும், செப்டம்பர் மாதத்தில் நீட் தேர்வு நடைபெற இருக்கிறது. அந்த நேரத்தில் மாணவர்கள் வசதிக்காக கூடுதல் ரயில் இயக்கக் கேட்டுக்கொண்டால் கூடுதல் ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ரயில்வே வாரிய தலைவர் வினோத்குமார் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.