Skip to main content

80 எம்.எல்.ஏ.க்களுக்கு அதிர்ச்சி தந்த ஆளும் கட்சி

Published on 20/10/2018 | Edited on 20/10/2018
vote



 

சட்டசபை தேர்தலில் 80 எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதால் மத்திய பிரதேச அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 

230 தொகுதிகளைக் கொண்ட மத்தியப்பிரதேச மாநில சட்டசபைக்கு வருகிற நவம்பர் 28-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி அங்கு தேர்தல் களம் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது.
 

வேட்பாளர்களை தேர்வு செய்வதில் பா.ஜனதா தீவிரம் காட்டி வருகிறது. பிரதமர் மோடியின் ‘நமோ ஆப்’ செயலிக்கும் எம்.எல்.ஏ.க்கள் பற்றி ஏராளமான புகார்கள் வந்துள்ளன. அதன் அடிப்படையில் புகாருக்கு ஆளாக எம்.எல்.ஏ.க்களுக்கும், மக்கள் மத்தியில் அதிருப்திக்கு ஆளான எம்.எல்.ஏ.க்களுக் கும் மீண்டும் தேர்தலில் போட்டியிட அனுமதி அளிப்பது இல்லை என்று பா.ஜனதா மேலிடம் முடிவு செய்துள்ளது.

 

அதன்படி மொத்தம் 80 எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்படுகிறது. அதே போல சில அமைச்சர்களுக்கும் வாய்ப்பு மறுக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

 

சார்ந்த செய்திகள்