Skip to main content

ஏற்றுமதி ஜனவரியில் 25.28% ஆக உயர்வு!

Published on 16/02/2022 | Edited on 16/02/2022

 

Exports rise 25.28% in January

 

நாட்டின் ஏற்றுமதி கடந்த ஜனவரி மாதத்தில் 25.28% உயர்ந்திருப்பதாக மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜனவரி மாதத்தில் மட்டும் ஏற்றுமதி 2,58,750 கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்திருக்கிறது. 

 

இதற்கு பெட்ரோலிய பொருட்கள், ஆபரணங்கள் மற்றும் கற்கள், பொறியியல் சார்ந்த பொருட்களின் ஏற்றுமதி அதிகரித்திருப்பதே காரணம் என்று மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது. இதேபோல இறக்குமதியும் ஜனவரி மாதத்தில் 23.54% உயர்ந்து, 3,89,475 கோடி ரூபாய் அளவுக்கு அதிகரித்திருக்கிறது. 

 

அதேபோல், ஜனவரி மாதத்தில் தங்கம் இறக்குமதி, 40.52% குறைந்திருப்பதாகவும், கச்சா எண்ணெய் விலை 26.9% அதிகளவில் உயர்ந்திருப்பதாகவும் மத்திய வர்த்தக அமைச்சகம் கூறியுள்ளது. 


 

சார்ந்த செய்திகள்