Skip to main content

3 கோடி லஞ்சம் வருமான வரித்துறை துணை கமிஷனர் கைது

Published on 23/09/2017 | Edited on 23/09/2017
3 கோடி லஞ்சம் வருமான வரித்துறை துணை கமிஷனர் கைது

3 கோடி லஞ்ச வழக்கில் மும்பை வருமான வரித்துறை துணை கமிஷனரை சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். மும்பை வருமான வரித்துறையில் துணை கமிஷனராக இருப்பவர் ஜெய்பால் சுவாமி. இவர் 3 கோடி லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுபற்றி விசாரணை நடத்திய சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று ஜெய்பால் சுவாமி மற்றும் 2 பேரை கைது செய்தனர். இவர்கள் மூன்று பேரின் வீடுகள் மற்றும் அவர்களுக்கு சொந்த மான இடங்களில் தொடர்ந்து சோதனை நடந்து வருவதாகவும், இதுவரையிலான சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் சி.பி.ஐ. செய்தி தொடர்பாளர் கூறினார்.

சார்ந்த செய்திகள்