Skip to main content

மூன்றுநாட்கள் உணவின்றி மூச்சுத்திணறும் இடரில் சிக்கித்தவித்த 28 இளம்பெண்கள்- பத்திரமாக மீட்ட விமானப்படை வீரர்கள்

Published on 18/08/2018 | Edited on 18/08/2018

 

 

கேரளாவில் இதுவரை வெள்ளத்தினாலும், நிலச்சரிவினாலும் 357 பேர் பலியாகி உள்ளதாக கேரளா முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும் மீட்பபுப்பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

 

இந்நிலையில் கேரளமாநிலம் திருவனந்தபுரத்தில் இன்று மாலை ஆறு மணியளவில் இந்தியன் ஏர்போர்ஸ் வீரர்கள் எம்.ஐ.எஸ்.கியூ என்ற ஹெலிகாப்டர் மூலம் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க, மீட்புபணிக்காக சென்றனர் அந்த நேரத்தில் அப்பகுதியில் கனத்தமழை பொழிந்தது ஆனால் அதையும் பொருட்படுத்தாமல் மீட்புப்பணியில் இறங்கினர். அப்போது மூச்சு திணறும் அபாயத்தில் சுமார் மூன்று நாட்களாக உணவின்றி நிலப்பரப்பு மட்டத்திலிருந்து சுமார் 30 மீட்டர் தாழ்வான பகுதியில் வெள்ள இடர்பாடுகளில் சிக்கிதவித்து கொண்டிருந்த 28 இளம்பெண்களை போராடி மீட்டனர். மீட்கப்பட்ட அந்த பெண்கள் வீரர்களில் காலில் விழுந்து நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளனர்.  

சார்ந்த செய்திகள்