உத்திரப் பிரதேசத்திலுள்ள சீதாபூர் மாவட்டத்தில் 22 திருமணமான பெண்கள் கணவர்கள் உயிருடன் இருக்கும்போதே கணவன் இறந்துவிட்டதாக கைம்பெண் உதவித் தொகையை வாங்கி வரும் சம்பவம் அதிர்ச்சியை அளித்துள்ளது.
சந்தீப் குமார் என்பவரின் மனைவியின் மொபைலுக்கு ரூ 3000 வங்கி கணக்கில் ஏறியுள்ளதாக மெசெஜ் வந்துள்ளது. இதை கவணித்த சந்தீப் குமார், வங்கிக்கு சென்று எதற்காக ரூ. 3000 தனது மனைவி வங்கி கணக்கில் ஏறியுள்ளது என்று விசாரித்துள்ளார். கிடைத்த பதில் என்ன என்றால், ”இந்த பெண்ணின் கணவன் இறந்துவிட்டதால் அரசாங்கம் சார்பில் மாதா மாதாம் தரப்படும் உதவித்தொகை” என்று வங்கியில் சொல்லப்பட்டுள்ளது. இதை கேட்டு அதிர்ச்சியடைந்தவர் வீட்டுக்கு திரும்பி வந்து விசாரிக்கையில், அவரது மனைவியை போன்று தனது சொந்தக்காரர்கள் பலரும் அவ்வாறு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. அந்த பெண்களின் கணவர்களும் இறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதை கேட்டு கோபமடைந்த சந்தீப் குமார், மாவட்ட நிர்வாகத்தில் புகார் அளித்துள்ளார். பின்னர், இது குறித்து விசாரிக்கையில் அந்த கிராமத்திலிருந்து மட்டும் 22 பேர் கணவர்கள் இறந்துவிட்டதாக உதவித்தொகை வாங்கி வருவது தெரியவந்துள்ளது. மேலும் அதிகாரிகள் இந்த புகார் பற்றி நடவடிக்கை இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.