சிபிஎஸ்இ தேர்வில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவியை 12 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர் என்ற செய்தி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுகுறித்த புகாரை போலீசார் வாங்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது.
அரியானா மாநிலம் மகேந்திரகார் மாவட்டம் குருகிராம் நகரைச் சேர்ந்த 19 வயது மாணவி சிபிஎஸ்இ தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றதற்காக மோடியிடம் விருது பெற்றவர்.
கடந்த புதன்கிழமை அந்த மாணவி சிறப்பு பயிற்சி வகுப்புக்குச் சென்றுவிட்டு வீடுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது ஒரு காரில் வந்த 3 பேர், அவரை வழிமறித்து காரில் கடத்திச் சென்றனர். ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு மாணவியை கடத்திச் சென்ற அவர்கள், ஒரு இடத்தில் நிறுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அப்போது அந்த இடத்தில் இருந்த மற்றவர்களும் இந்த 3 பேருடன் சேர்ந்து மாறி மாறி பலாத்காரம் செய்துள்ளனர்.
இதனால் பாதிக்கப்பட்ட அந்த மாணவி தனது சுயநினைவை இழந்தார். பின்னர் அந்த மாணவியை பேருந்து நிலையத்தில் கொண்டு வந்து விட்டுவிட்டு அந்த நபர்கள் தப்பினர். பேருந்து நிலையத்தில் இருந்த சிலர், மாணவியை அடையாளம் கண்டு அவரது தந்தைக்கு தகவல் சொல்லியுள்ளனர். பேருந்து நிலையத்திற்கு வந்த மாணவின் தந்தையும், தாயும் மகளின் நிலைமையை கண்டு கதறி அழுதனர். அப்போது, தன்னை பலாத்காரம் செய்தது உள்ளூர் நபர்கள்தான் என மாணவி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மாணவியின் தந்தை காவல்நிலையத்தில் புகார் கொடுத்ததை, போலீசார் வாங்க மறுத்து உள்ளனர். எவ்வளவோ கெஞ்சியும் காவல்நிலையத்தில் போலீசார் புகாரை வாங்க மறுத்துள்ளனர். இதனையடுத்து அவர், நேரடியாக காவல்துறை அலுவலரிடம் புகார் அளித்துள்ளதாகவும் கூறி உள்ளார். அவர் இந்த புகாரை பதிவு செய்து சம்மந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக அனுப்பி உள்ளார்.
பாதிக்கப்பட்ட மாணவியின் தாயார், சிபிஎஸ்இ தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றதற்காக பிரதமர் மோடியிடம் விருது பெற்றார். என் மகளின் நிலைமை இப்போது இப்படி ஆகிவிட்டது. போலீசார் புகாரை வாங்க மறுக்கிறார்கள் என்று கதறினார்.