அரவிந்த் கெஜ்ரிவால் செயல்பாடுகளைத் தடுக்கவே இந்த ரெய்டு என டெல்லி துணை முதல்வர் கூறியுள்ளார்.
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆளுங்கட்சியாக செயல்பட்டு வருகிறது.அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி முதல்வராக உள்ளார். இந்நிலையில் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் வீடு, கலால்துறை ஆணையர் கோபிகிருஷ்ணாவின் அலுவலகம் உள்பட 21 இடங்களில் ஓரிரு தினங்களுக்கு முன்பு சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். டெல்லி அரசின் புதிய மதுபானக் கொள்கையில் விதிமீறல் நடைபெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர். 14 மணிநேரம் இந்த சோதனை நடைபெற்றது.
இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த மணிஷா சிசோடியா "நான்கு நாட்களில் சிபிஐ அல்லது அமலாக்கத் துறையால் நான் கைது செய்யப்படலாம் எனவும் பாஜகவை கண்டு ஆம் ஆத்மி பயப்படாது என்றும் ஆம் ஆத்மியை பாஜகவால் உடைக்க முடியாது என்றும் கூறியுள்ளார். மேலும் டெல்லியில் 2024ல் தேர்தல் பாஜகவிற்கும் ஆம் ஆத்மிக்கும் தான் எனவும் கூறிய அவர் அரவிந்த் கெஜ்ரிவால் செயல்பாடுகளை தடுக்கவே இந்த ரெய்டு" என்றும் கூறியுள்ளார்.