மியான்மர் மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்கள் மீட்கப்பட்டது தொடர்பாக, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
அதில், மியான்மர் நாட்டில் இருந்து 49 இந்தியர்களும், கம்போடியா நாட்டில் இருந்து 80 இந்தியர்களும் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். மியான்மர் நாட்டில் மொத்தம் எத்தனை இந்தியர்கள் சிக்கியுள்ளனர் என்ற தகவல் அரசிடம் இல்லை. போலி வெளிநாட்டு வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை நம்பி ஏமாற வேண்டாம். வெளிநாடுகளில் மோசடி வேலை வாய்ப்புகளில் சிக்கிக் கொண்டால் நிலைமை மிகவும் கடினமாகிவிடும். மியான்மர், கம்போடியா, லாவோஸ் போன்ற நாடுகளில் நல்ல சம்பளத்துடன் வேலை என வாய்ப்புகள் வந்தால் மிகவும் கவனம் தேவை. ஆயுதம் தாங்கிய சீன மாபியா கும்பல்கள் தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் ஆள் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன. போலி வேலை வாய்ப்பில் வெளிநாடுகளுக்கு அழைத்து செல்லப்படுவோர், சைபர் கிரைம் மோசடிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.