Skip to main content

உ.பி-யில் நடந்த போராட்டத்தில் 11 பேர் பலி... தொடரும் சோகம்!

Published on 21/12/2019 | Edited on 21/12/2019

நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு இரண்டு அவைகளிலும் கடந்த சில நாட்களுக்கு முன் நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பிய இந்த பிரச்சனையில் எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.  இதுதொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், தில்லி உள்ளிட்ட முக்கிய இடங்களில் மாணவர்கள் போராடி வருகிறார்கள்.



இந்நிலையில் இந்த சட்டத்தை எதிர்த்து உத்திரபிரதேசத்தில் மாநிலம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகின்றது.  கான்பூரில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் வன்முறை ஏற்படவே போலிசாருக்கும், பேராட்டகாரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நிலைமை மோசமடைந்த நிலையில் காவல்துறையினர் தடியடி நடத்தினார்கள். இதில் சம்பவத்தில் இதுவரை 6 பேர் பலியானார்கள் என்று நேற்று கூறப்பட்ட நிலையில் இன்று உயிரிழப்பு 11 ஆக அதிகரித்துள்ளது. இந்த உயிரிழிப்புக்கு காவல்துறையினரின் துப்பாக்கிச்சூடே காரணம் என்று போராட்டகாரர்கள் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், நாங்கள் துப்பாக்கிச்சூடே நடத்தவில்லை என்று காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
 

 

சார்ந்த செய்திகள்