Skip to main content

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9ஆக உயர்வு! - மேலும் 5 பேர் கவலைக்கிடம்!

Published on 22/05/2018 | Edited on 22/05/2018


தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது. இதில் மேலும் 5 பேர் மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளனர்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டள்ளது. புற்றுநோய் வர இந்த ஆலை காரணமாக இருக்கிறது. நிலத்தடி நீர் கெட்டுவிட்டது. இந்த ஆலையின் விரிவாக்கத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி குமாரரெட்டியார்புரம் கிராம மக்கள் நடத்திவரும் போராட்டம் இன்று 100வது நாளை எட்டியுள்ளது.

இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட பல்வேறு கிராம மக்கள் ஏராளமானோர் இன்று காலை பேரணியாக சென்றனர். அப்போது பேரணியாக சென்ற பொதுமக்களை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர்.

ஆனால் தடையை மீறி போராட்டகாரர்கள் தொடர்ந்து சென்றனர். இதனால் போராட்டக்காரர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தி கலைக்க முயன்றனர். இருப்பினும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தொடர்ந்து முன்னேறினர். அப்போது போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர்.

அதையும் பொருட்படுத்தாத மக்கள் கண்ணீர் புகைக்குண்டு வீசும் வாகனத்தையும், போலீசாரையும் ஓட ஓட விரட்டி அனுப்பினர். இதனால் நிலையை கட்டுக்குள் கொண்டு வர முடியாத போலீசார் திணறினர். இதையடுத்து போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். போலீசாரின் தூப்பாக்கி சூட்டில் ஒரு பெண் உள்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதில் மேலும் 5 பேர் மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சார்ந்த செய்திகள்