Skip to main content

திருப்பதி புதிய அறங்காவலர் குழு - தமிழகம் புறக்கணிப்பு ஏன்?

Published on 20/04/2018 | Edited on 20/04/2018
thiruppathi

 

திருப்பதி அறங்காவலர் குழுவில் தமிழகம் முதன்முறையாக புறக்கணிக் கப்பட்டுள்ளது.

 

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு புதிய அறங்காவலர் குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது.  18 பேர் கொண்ட புதிய அறங்காவலர் குழுவில் கர்நாடகர் -1,  தெலுங்கானா -2, ஆந்திரா- 15 என நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

 

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு அறங்காவலர் குழு அமைக்கப்படுகிறது.  அறங்காவலர் குழுவில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் இடம்பெறுவது வழக்கம்.   கடந்த முறை அறங்காவலர் குழுவில் தமிழகத்தை சேர்ந்த சேகர் ரெட்டி இடம்பெற்றிருந்தார்.  

 

தமிழகம் புறக்கணிக்கப்பட்டதற்கு  சேகர் ரெட்டி வழக்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.  மேலும், ஆந்திராவின் சிறப்பு மாநில அந்தஸ்திற்கு தமிழகம் ஆதரவு அளிக்காததும் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

சார்ந்த செய்திகள்