Published on 22/05/2020 | Edited on 22/05/2020

தமிழகத்தில் காவல்துறை டி.எஸ்.பி.க்கள் மூன்று பேரை இடமாற்றம் செய்து டி.ஜி.பி. திரிபாதி உத்தரவிட்டுள்ளார். அதன்படி, வேலூர் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு டி.எஸ்.பி. சுரேஷ் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சரக டி.எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். செய்யாறு சரக டி.எஸ்.பி.யாக இருந்த பி.சுந்தரம் வடசென்னை போக்குவரத்து புலனாய்வு உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் வடசென்னை போக்குவரத்து உதவி ஆணையராக இருந்த பிரகாஷ் பாபு பொருளாதாரக் குற்றப்பிரிவு டி.எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.