Published on 23/05/2020 | Edited on 23/05/2020

தருமபுரி அருகே மாரண்டஹள்ளியில் செய்தியாளர்களைச் சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், "கலை&அறிவியல் கல்லூரிகளில் ரத்துசெய்யப்பட்ட சுழற்சி முறை வகுப்புகளால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்றார்.
மேலும், காலை, மாலை வகுப்பை ஒரே வகுப்பாக மாற்றுவதால் படிப்போர் எண்ணிக்கை, மாணவர் சேர்க்கை பாதிக்கப்படாது. ரூபாய் 150 கோடியில் 735 வகுப்பறைகளைக் கட்டியவுடன் கல்லூரி வகுப்புகள் ஒரே ஷிப்ட் அடிப்படையில் நடக்கும்" என்றார்.