Published on 15/11/2018 | Edited on 15/11/2018

கஜா புயல் இன்று கரையைக் கடக்க இருக்கிறது. கரையைக் கடக்கும்போது 70 முதல் 100 கி.மீ வேகத்தில் காற்றடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனால் புயல் பாதிப்பு ஏற்படக்கூடிய கடலூர், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய 7 மாவட்டங்களில் வசிக்கும் தனியார், அரசு ஊழியர்கள் 4 மணிக்குள் வீடு திரும்பவேண்டும். என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் வசிக்கும் ஊழியர்கள் 3 மணிக்குள் வீடு திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.