Published on 09/05/2020 | Edited on 09/05/2020
மின்சார சட்டத்திருத்த மசோதாவைக் கைவிடுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
தமிழக முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில், "புதிய திருத்தம் கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிராகவும், மாநில அரசுகளின் அதிகாரத்தைப் பறிப்பதாகவும் உள்ளது. கரோனா தடுப்புப் பணிகளில் மாநில அரசுகள் கவனம் செலுத்துவதால் ஆலோசிக்க அவகாசம் தேவை. விவசாயத்துக்கு இலவச மின்சாரம் வழங்குவது மாநில அரசின் உரிமை சார்ந்தது. அதை மாநிலங்களிடமே விட வேண்டும். நேரடியாக மானியம் செலுத்துவதிலும் சிக்கலை ஏற்படுத்தும். வீட்டு உபயோக நுகர்வோரையும், விவசாயிகளையும் இந்த மசோதா பாதிக்கும் என்பதால் கைவிட வேண்டும்" என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.