Skip to main content

சிலைக் கடத்தல் வழக்கை சிபிஐ விசாரணக்கு மாற்றும் அரசாணைக்கு உயர்நீதிமன்றம் தடை!

Published on 07/08/2018 | Edited on 07/08/2018


சிலைக் கடத்தல் வழக்கை சிபிஐ விசாரணக்கு மாற்றும் அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை, சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அமர்வு விசாரணை நடத்தி வருகிறது. நீதிமன்ற உத்தரவுப்படி சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகளை ஐஜி பொன்.மாணிக்கவேல் விசாரணை நடத்தி வந்தார்.

 

 

இந்நிலையில், உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனு ஒன்றில், சிலை கடத்தல் தொடர்பான அறிக்கைகளை ஒராண்டாக பொன்.மாணிக்கவேல் தமிழக அரசிடம் தெரிவிப்பது இல்லை. அவர் விசாரிப்பதில் திருப்தியில்லை. சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றுவது என அரசு கொள்கை முடிவு எடுத்து அரசாணை வெளியிட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அதில், ஒரு நிமிடம் கூட அமலில் இருப்பதற்கு தகுதியில்லாத அரசாணை இது, நீதிபதிகள் மாகதேவன், ஆதிகேசவலு அமர்வு கடுமையாக விமர்சித்தது.

மேலும், ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் விசாரித்த சிலை கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு வெளியிட்ட அரசாணை அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்