Skip to main content

ரஜினி கருத்துக்கு துரைமுருகன் பதிலடி!

Published on 08/11/2019 | Edited on 08/11/2019

 

சென்னை போயஸ் கார்டனில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், தமிழகத்தில் சரியான ஆளுமைக்கான வெற்றிடம் உள்ளது. அரசியல் கட்சி தொடங்கும் வரை தொடர்ந்து நடிப்பேன். அயோத்தி வழக்கில் தீர்ப்பு எப்படி வந்தாலும் மக்கள் அமைதி காக்க வேண்டும். எம்ஜிஆர் கூட அரசியல் கட்சி தொடங்கி முதல்வராகும் வரை நடித்தார். குறிப்பிட்ட சிலர் மட்டுமே எனக்கு காவி சாயம் பூச முயற்சிக்கிறார்கள். இது அரசியலில் சகஜம் என்றார். 


 

 

 dmk


 

ரஜினிகாந்த் பேட்டி தொடர்பாக திமுக பொருளாளர் துரைமுருகனிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டனர்.
 

கேள்வி : காவி சாயம் பூசப் பார்க்கிறார்கள். அதில் நான் சிக்க மாட்டேன் என்று ரஜினி கூறியிருக்கிறார்.
 

பதில் : அது அவருடைய கருத்து. அவர் மீது யார் காவி சாயம் பூசினார்கள் என்றும் எங்களுக்கு தெரியாது. அவர் யாருக்கு பதில் சொல்லியிருக்கிறார் என்றும் எங்களுக்கு தெரியாது.
 

கேள்வி : இதன் மூலம் அவர் பாஜகவின் கூட்டணியில் இல்லை என்று தெரிந்திருக்கிறது. வரும் சட்டமன்றத் தேர்தலில் அவரும் களத்தில் இறங்கும்போது மும்முனை போட்டி இருக்குமா?
 

பதில் : நான் கட்சியை தொடங்குவேன் என்று சொல்லியிருக்கிறார். தொடங்கட்டும் பார்க்கலாம். 
 

கேள்வி : வெற்றிடம் இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்...
 

பதில் : வெற்றிடத்தை காற்று நிரப்பியே தீரும். அது விஞ்ஞான தத்துவம். அந்த வெற்றிடத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் என்ற காற்று நிரப்பிவிட்டது. இவ்வாறு கூறினார். 


 

 


 

சார்ந்த செய்திகள்