Skip to main content

காவல்துறையையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஹவாலா மோசடி!!!

Published on 23/06/2018 | Edited on 23/06/2018

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பர்மா பஜார் பகுதியில் கடை வைத்திருக்கும் காந்திபுரத்தைச் சேர்ந்த சுப்பிரமணி தனது உறவினரான சிட்டாள் ஆச்சி என்பவர் வீட்டில் 2.60கோடி பணத்தை ஒரு பெட்டியில் வைத்து பார்த்துக் கொள்ள சொல்லியுள்ளார். 


 

hawala



 

 


ஒரு நாள் அந்த பெட்டியை பார்த்தபோது அதில் பணம் இல்லை என்னவென்று கேட்டபோது, சுப்பிரமணியின் கார் டிரைவர் நரராயணன் என்பவர் சிட்டாள் ஆச்சி வீட்டிற்குள் வந்து ஒரு அட்டைப் பெட்டி பார்சலை வைத்து விட்டு, பணம் இருந்த பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறி இருப்பார் என தெரிவித்துள்ளார். இதையடுத்து காவல்துறையில் தனது மகளின் படிப்பு செலவுக்காக வைத்திருந்த 40 லட்சம் பணத்தை காணவில்லை என புகார் அளித்துள்ளார்.

காவல்துறையினர் நாராயணனை அழைத்து விசாரித்தபோது, அந்தப்பெட்டியை தனது மைத்துனரான காரியாபட்டி செல்வராஜ் என்பவரிடம் பணப்பெட்டியை கொடுத்து அனுப்பியுள்ளேன் எனக்கூறியுள்ளார். செல்வராஜை அழைத்து விசாரித்தபோது, 

 

 

தனது நண்பரான ராமநாதபுரத்தைச் சேர்ந்த சேகர் என்பவரிடம் கொடுத்துள்ளதாக கூறியுள்ளார். சுப்பிரமணி கொடுத்த புகாரின் பேரில், ஒவ்வொரு இடமாக அழைந்த காவல்துறை கடைசியாக அந்த பெட்டியை பறிமுதல் செய்தது. அந்தப்பெட்டியை பிரித்து பார்த்த காவல்துறைக்கு பெரும் அதிர்ச்சி. பெட்டி முழுவதும் வெளிநாட்டு பணங்களாக இருந்தன. அதைத்தொடர்ந்து நடந்த விசாரணையில்தான் தெரிந்தது, அவர் குருவியாக வேலை பார்க்கிறார் என்பதும்,  ஹவாலா பிசினஸ் செய்கிறார் என்பதும்...

 

 


பணத்தை பறிமுதல் செய்த காவல்துறை இந்த பணம் இந்திய மதிப்பில் கிட்டதட்ட 2.60கோடி என்றும், செல்வராஜ், நாராயணன், சேகர் ஆகியோரிடம் விசாரணை நடந்து வருகின்றது என்றும் தெரிவித்துள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்