Skip to main content

டெல்லி ஐகோர்ட்டில் டி.டி.வி. தினகரன் ஆஜர்

Published on 14/03/2018 | Edited on 14/03/2018

 

அதிமுகவில் பிளவு ஏற்பட்ட பின்னர் நடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது இரட்டை இலை சின்னத்துக்கு தினகரனும், மதுசூதனனும் உரிமை கோரியதால் சின்னத்தை தேர்தல் கமி‌ஷன் முடக்கியது.
 

இரட்டை இலை சின்னத்தை மீண்டும் பெற தேர்தல் அதிகாரிகளுக்கு இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் மூலம் தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதாக டெல்லி போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். டெல்லி திஸ்ஹசாரி நீதிமன்றத்தில் இந்த விசாரணை நடைபெற்று வந்தது. கைதான இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக தினகரன், அவரது நண்பர் மல்லிகார் ஜுனா மற்றும் சிலர் கைதானார்கள்.
 

நீதிமன்றம் தினகரனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இந்த வழக்கில் கோர்ட்டில் முதலாவது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு டெல்லி திஸ்ஹசாரி கோர்ட்டில் இருந்து பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. தினகரனுக்கு ஏற்கனவே கோர்ட்டு சம்மன் அனுப்பி இருந்ததால் இன்று தினகரன் கோர்ட்டில் ஆஜர் ஆனார்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

எனக்கோ, என் கணவரின் உயிருக்கோ ஆபத்து நேரிட்டால் சசிகலா குடும்பமே பொறுப்பு: ஜெ.தீபா புகார்

Published on 03/08/2018 | Edited on 03/08/2018
Deepa


எனக்கோ, என் கணவர் மாதவனின் உயிருக்கோ, உடமைக்கோ ஏதாவது ஆபத்து நேரிட்டால் சசிகலா குடும்பமே பொறுப்பு என்று ஜெ.தீபா கூறியுள்ளார்.
 

சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்துக்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா வந்தார். அங்கு ஒரு புகார் மனு கொடுத்தார். 
 

அந்த மனுவில்,
 

ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. இதையடுத்து கடந்த பல ஆண்டுகளாக என் அத்தையோடு இருந்து அவரது சொத்துக்களை சுரண்டி வாழ்ந்த சசிகலாவையும், அவரது உறவினர்களையும் எதிர்த்து குரல் கொடுத்தேன்.
 

அவர்கள் மீது போலீசில் புகார் செய்தேன். இதனால் சசிகலா தரப்பில் இருந்து நேரடியாகவும், மறைமுகமாகவும் எனக்கு மிரட்டல்கள் வரத் தொடங்கியது. அவரது தூண்டுதலின் பேரில் சிலர் நள்ளிரவு நேரங்களில் என் வீட்டின் வளாகத்தில் நுழைந்து இடையூறுகள் செய்தனர். சத்தம் கேட்டு வெளியே வந்ததும் மேல் மாடியில் இருக்கும் என் தம்பி தீபக்கை பார்க்க வந்ததாக கூறினார்கள். தொடர்ந்து பல வழிகளில் மிரட்டல் வந்து கொண்டிருக்கிறது.
 

எனக்கோ, என் கணவர் மாதவனின் உயிருக்கோ, உடமைக்கோ ஏதாவது ஆபத்து நேரிட்டால் சசிகலா குடும்பமே பொறுப்பு. எனவே உடனடியாக நடவடிக்கை எடுத்து எனக்கும், என் கணவருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டுகிறேன். எனது வீட்டுக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்.
 

எனக்கு பலமுறை சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரன் ஆட்களால் மிரட்டல் வந்துள்ளது. அரசியலில் எனது பெயரை கெடுக்கவும், எனது அரசியல் பணிகளை தடுக்கவும் முயற்சித்து வருகிறார்கள். நடைபெறும் நிகழ்வுகளை பார்க்கும் போது சசிகலா மற்றும் தினகரன் ஆட்களால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று அஞ்சுகிறேன். எனவே தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டுகிறேன். இவ்வாறு கூறி உள்ளார். 

 

 


 

Next Story

17 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு: 27ல் விசாரணை என சுப்பீரம் கோர்ட் ஆணை

Published on 25/06/2018 | Edited on 25/06/2018
supreme-court


தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்க வழக்கில், 17 பேர் சார்பில், உச்ச நீதிமன்றத்தில், புதிய மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த மனு வரும் 27ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. 

 

 


18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தபோது தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, சபாநாயகர் எடுத்த முடிவு சரியானது; அவரது முடிவில், நீதிமன்றம் தலையிட முடியாது என தீர்ப்பளித்தார். மற்றொரு நீதிபதி சுந்தர் அளித்த தீர்ப்பில், சபாநாயகர் எடுத்த முடிவு தவறானது' என்றார். இரு நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பால், இந்த வழக்கு, மூன்றாவது நீதிபதியின் விசாரணைக்கு சென்றது. இந்த வழக்கை விசாரிக்க, மூன்றாவது நீதிபதியாக, விமலா நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் தங்க தமிழ்செல்வனை தவிர்த்து 17 பேர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், சபாநாயகர் தனபால், எங்களை தகுதி நீக்கம் செய்தது சரியல்ல என்பதை நிரூபிக்க, உச்ச நீதிமன்றம் வாய்ப்பு தர வேண்டும். 'அதற்கு வசதியாக, சென்னை உயர் நீதி மன்றத்தில் உள்ள, இது தொடர்பான வழக்கை, உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என கோரியிருந்தனர்.

 

 

இந்த மனு இந்த மனு வரும் 27ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. 

இதற்கிடையில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட, எம்.எல்.ஏ.க்களில், தங்க தமிழ்செல்வன், தன் பதவியை ராஜினாமா செய்து விட்டு, ஆண்டிப்பட்டி தொகுதியில், இடைத்தேர்தலை சந்திக்க விரும்புவதாக ஏற்கனவே தெரிவித்திருந்தார்.