Skip to main content

காசிக்கு ஆஜராக மாட்டோம் என தீர்மானம்! நாகர்கோவில் வழக்கறிஞர்கள் சங்கம் அதிரடி!

Published on 14/05/2020 | Edited on 16/05/2020
dddd

                              நாகர்கோவில் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் ராஜேஷ்


பள்ளி, கல்லூரி மாணவிகள், பெரும் செல்வந்தர் வீட்டுப் பெண்கள், குடும்பப் பெண்கள் போன்றோரை நாசப்படுத்திய நாகர்கோவிலைச் சேர்ந்த சுஜி என்ற காசிக்கு, ''பொள்ளாச்சி சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு பொள்ளாச்சி வழக்கறிஞர்கள் சங்கத்தினர், தாங்கள் யாரும் அந்த குற்றவாளிகளுக்கு ஆஜராக மாட்டோம் என சொன்னது போல நாகர்கோவிலும் வழக்கறிஞர்கள் தெரிவிக்க வேண்டும்'' என்றும், ''பெண்கள் விஷயத்தில் இதுபோன்று நடந்து கொண்டால் அதற்கு ஒரே தண்டனை தெலங்கானாவில் நடந்ததுபோல என்கவுண்டர்தான் இதற்கு ஒரே வழி, அப்படி நடந்தால்தான் இனிமேல் இதுபோன்ற சம்வங்கள் நடக்காது''  என சமூக ஆர்வலர்கள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், பொதுமக்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தனர். இதைத்தான் நாமும் வெளிப்படுத்தியிருந்தோம். 
 

''பொள்ளாச்சி போலவே நாகர்கோவிலிலும்!'' என்ற தலைப்பில் நக்கீரன் யூடியூப் சேனலில், மக்களின் குரலாக ''பொள்ளாச்சி வழக்கறிஞர்கள் சங்கத்தினரைப்போலவே நாகர்கோவில் வழக்கறிஞர்களும் ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும்'' என்று வலியுறுத்தி கேட்டுக்கொண்டோம்.

 

இந்த நிலையில் ''நாகர்கோவில் வழக்கறிஞர்கள் பொள்ளாச்சி வழக்கறிஞர்கள் போல செயல்பட வில்லை என்று தன் ஆதங்கத்தை நக்கீரன் வெளிப்படுதியிருந்தது. நக்கீரன் எண்ணியதைப்போல நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட வழக்கறிஞர் சங்கம் சார்பில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது'' என நாகர்கோவில் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

 

நாகர்கோவில் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் ராஜேஷ், ''நாகர்கோவிலைச் சேர்ந்த காசி என்பவர் மீது பெண்களை ஏமாற்றுதல், ஆபாச படம் எடுத்து இணையத்தில் வெளியிடுதல், பெண்களை மிரட்டி பணம் பறித்தல் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்காக காவல்துறை வழக்குப்பதிவு செய்து மேற்படி வழக்குகள் நாகர்கோவில் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. காசியின் செயல்கள் மனித குலத்திற்கே எதிராக இருப்பதால் அவர் மீது பதியப்பட்டுள்ள வழக்குகளில் நாகர்கோவில் வழக்கறிஞர்கள் சங்க உறுப்பினர்கள் யாரும் ஆஜராக மாட்டார்கள் என எங்களது சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் முடிவு எடுத்துள்ளோம். இதன் அடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள எந்த ஒரு வழக்கறிஞரும் காசிக்கு ஆஜராக மாட்டர்கள் என தெரிவித்துக்கொள்கிறேன்'' என கூறியுள்ளார்.                                                                        

 

ggg

                                                                    சுஜி என்ற காசி

மேலும் ''காசிக்கு நாங்கள் யாரும் வாதாட மாட்டோம். இதற்கு அனைத்து முயற்சிகளையும் செய்தவர் வழக்கறிஞர் மகேஷ் என நாகர்கோவிலைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். நக்கீரன் எடுத்த முயற்சிக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது.


 

சார்ந்த செய்திகள்