தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும், நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி அந்த ஆலையை மூடவேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை நேரில் சந்தித்து அவர்களோடு போராட்டத்தில் பங்கேற்பதாகவும் அவர் அறிவித்தார்.
இதற்காக கமல்ஹாசன் இன்று விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்ட அவர் அ.குமரெட்டியாபுரம் சென்றார். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களிடம் பேசிய அவர், நான் அரசியல்வாதியாகவோ சினிமா நடிகனாகவோ இங்கு வரவில்லை, ஒரு தனிமனிதனாக வந்துள்ளேன். நான் தமிழன், உங்களுடனான என் உறவு வெறும் மொழியால் மட்டும் ஏற்பட்டதல்ல உணர்வாலும் ஏற்பட்ட உணர்வு இது. உங்கள் மூச்சு பட்ட இந்த வேப்பமரத்து காற்று எனக்கு புது உத்வேகத்தையும் உற்சாகத்தையும் தந்துள்ளது. இவ்வாறு கூறினார்.