மாறவேண்டிய தவறு இழைப்பவர்களின் மனநிலைதானே தவிர, பெண்களின் உடை என பாலியல் வன்கொடுமைக் குற்றங்கள் குறித்து நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார்.
இந்திய வர்த்தக சம்மேளனம் மற்றும் தொழில் கூட்டமைப்பு சார்பில் டெல்லியில் இன்று நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாலின சமநிலை ஆய்வறிக்கை குறித்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் உரையாற்றினார்.
அப்போது அவர், ‘பெண்களுக்கு நன்கு பழக்கப்பட்டவர்களே அவர்களின் மீது பாலியல் குற்றங்களில் ஈடுபடும்போது, மற்றவர்களால் என்ன செய்யமுடியும்? சிலர் பெண்களின் உடைதான் காரணம் என்கிறார்கள். உடைதான் காரணம் என்றால், வயதில் மூத்தவர்களும், குழந்தைகளும் ஏன் பாதிக்கப்பட வேண்டும்? இதுபோன்ற குற்றங்களில் பத்தில் ஏழு பாதிக்கப்பட்டவர்களின் உறவினர், நண்பர், பக்கத்துவீட்டுக்காரர்களாகத் தான் இருக்கிறார்கள். சட்ட நிறுவனங்கள் இன்னும் கூடுதலாக செயல்பட வேண்டியதன் கட்டாயம் இருக்கிறது’ என பேசியுள்ளார்.
நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சரே பாலியல் குற்றங்கள் குறித்து கவலை கொள்ளும் நிலையில்தான் நாடு பயணித்துக்கொண்டிருக்கிறது.