Published on 08/10/2018 | Edited on 08/10/2018

இன்று தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமரை சந்திக்கிறார். பேரிடர் நிவாரண நிதியை விரைந்து வழங்குவது தொடர்பாக மனு அளிப்பது, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க கோரிக்கை உள்ளிட்டவைகள் குறித்து முதல்வரும், பிரதமரும் ஆலோசனை செய்ய உள்ளனர். இதுத்தவிர தனிப்பட்ட முறையில் சில விஷயங்கள் குறித்தும் உரையாடுவார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளன.
தமிழ்நாட்டில் இடைத்தேர்தல்கள், 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கு ஆகியவை முக்கிய பிரச்சனைகளாக உள்ளது. ஆகையால் இந்த சந்திப்பு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அந்த சந்திப்பின்போது ஜெயக்குமார் உடனிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.