நீட் தேர்வு தமிழக மாணவர்களையும் , மாணவர்களின் பெற்றோர்களையும் காவு வாங்கிக் கொண்டிருக்கிறது. இதனால் ஒட்டு மொத்த மக்களும் விரக்த்தியடைந்திருக்கிறார்கள். இந்த நிலையில் தான் திருவாரூர் மாணவன் கஸ்தூரி மகாலிங்கத்தின் தந்தை கிருஷ்ணசாமி உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு புறப்பட தயாரான மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு நீட்டை ரத்து செய்யக் கோரி புதுக்கோட்டையில் மதிமுக தொண்டர் ஜகுபர் அலி தற்கொலைக்கு முயன்று கடைசி நேரத்தில் காப்பாற்றப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்ற தகவல் தெரிவிக்கப்பட்டதால் இரவில் கிளம்பி புதுக்கோட்டை வருகிறார் வைகோ.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் பெருநாவலூர் முனியன்வயல் கிராமத்தைச் சேர்ந்தவரான மதிமுக பிரமுகர் ஜாபர் அலி. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் பல உயிர்களை காவு வாங்கப் போகிறது என்றும் கடைவீதியிலும் வீட்டிலும் பேசிக் கொண்டிருந்தவர் தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இவருக்கு சகர்பானு என்ற மனைவியும் தலால்ஆஸ்மி ஜமீனாபானு என்ற இரு மகள்களும் உள்ளனர். இவர் கடந்த 30 வருடங்களாக மதிமுக தீவிர தொண்டராக இருக்கிறார். நேற்று மொத்தம் நீட் தேர்விற்காக இரண்டு பேர் இறந்ததை கேட்டு மிகவும் அதிர்ச்சியடைந்தார். இதனால் மனமுடைந்த இவர் தனது வீட்டில் இன்று மாலை தூக்குபோட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அருகிலிருந்தவர்கள் மீட்டு உடனடியாக ஆவுடையார் கோவில் மருத்துவமனையில் முதல் சிகிச்சைக்கு பின் தற்போது
புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.