Published on 25/10/2018 | Edited on 25/10/2018

18 எம்.எல்.ஏக்களையும் தகுதிநீக்கம் செய்யவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. கடந்த ஜூன் மாதம் நீதிபதி சுந்தர், இந்திரா பானர்ஜி அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால் இந்த வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு சென்றது. இருதரப்பையும் விசாரித்த நீதிபதி சத்தியநாரயணன் வழக்கை ஆகஸ்ட் 31தேதி தீர்ப்பை ஒத்திவைப்பதாக அறிவித்திருந்தார். அதன்பின் கிட்டதட்ட இருமாதங்களுக்கு பிறகு, 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது நீதிபதியான சத்தியநாராயணன் தீர்ப்பு வழங்குகிறார். இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.