கட்டை விரல் கேட்குமா, மோடியின் ஏகலைவன் பள்ளி?

நவோதயா பள்ளிகளைப் போலவே ஏகலைவன் பள்ளிகளைத் தொடங்கப் போவதாக மத்திய பாஜக அரசு அறிவித்துள்ளது. நவதோயா பள்ளிகள் என்பது வசதிமிக்கோருக்கான, இந்தியை மட்டுமே முதன்மையாக கொண்ட பள்ளிகள் ஆகும். அந்தப் பள்ளிகளில் தமிழுக்கு இடமே இல்லை. தமிழுக்கு இடமளிக்காத பள்ளிகளுக்கு தமிழகமும் இடமளிக்கவில்லை.
இப்போது, ஏகலைவன் பள்ளிகள் என்று பாஜக அரசு அறிவிக்கிறது. மாகாபாரதக் கதையில் அர்ச்சுனன் உள்ளிட்ட பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் துரோணாச்சாரி வில்வித்தையைக் கற்றுக் கொடுத்தார். வித்தை கற்கவே தகுதியில்லாதவர்கள் என்று ஒதுக்கப்பட்ட பிரிவில் பிறந்த ஏகலைவன் அவர் சொல்லிக் கொடுப்பதை தூரத்தில் இருந்தே கற்றுக்கொண்டான். அதுவும் துரோணாச்சாரியின் மாணவர்களைக் காட்டிலும் மிகத் திறமையாக கற்றுக் கொண்டான். இதை அவரிடமே சொன்னான் ஏகலைவன்.
அவனுடைய திறமையைக் கண்டு எரிச்சலடைந்த துரோணர், தனக்கு கொடுக்க வேண்டிய காணிக்கையாக ஏகலைவனின் கட்டைவிரலைக் கேட்டார். அதாவது, அவன் கற்ற வித்தையை பயன்படுத்த முடியாத அளவுக்கு கட்டை விரலை வாங்கிக் கொண்டார் என்கிறது கதை.
இப்போது ஏகலைவனின் பெயரைப் பயன்படுத்தி தொடங்கப் போவதாக கூறப்படும் இந்த பள்ளிகளிலும் அதே வர்ணாச்சிரம கொடுமைகள் இருக்குமா என்பது தெரியவில்லை.
அதாவது, படித்து முடித்ததும் பள்ளிக்கு காணிககையாக படித்த சர்டிபிகேட்டை கேட்டு வாங்கி்ககுவாங்களா என்று கேட்கிறார்கள் கல்வியாளர்கள்.
- ஆதனூர் சோழன்