Skip to main content

தமிழகத்தில் தீவிரவாதம்... அதிர வைக்கும் ரெய்டு!

Published on 19/07/2019 | Edited on 19/07/2019

தேசிய புலனாய்வு ஏஜென்சி (NIA) எனப்படும் தீவிரவாத தடுப்பு காவல்துறையினர் தமிழகத்தில் தொ டர்ந்து ரெய்டுகள் நடத்திக் கொண்டி ருக்கின்றனர். கைது நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றனர். இது தமிழகத்தில் தீவிரவாதி களின் நடமாட்டம் மிக அதிகம் என்கிற பிம்பத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இது உண்மையா என்கிற கேள்வியை தமிழக காவல்துறை வட்டாரங்களில் முன்வைத்தோம்.

 

raid



தேசிய புலனாய்வு ஏஜென்சி எனப்படும் என்.ஐ.ஏ.வின் நடவடிக்கைகள் மிகவும் வியப்பை உருவாக்குகின்றன. அவர்கள் அசாருதீன் என்கிற நபரை கடந்த ஜூன் மாதம் கோவையில் கைது செய்தார்கள். அவர் மீது போடப்பட்ட வழக்கில் ஒரு முதல் தகவல் அறிக்கையையும் தாக்கல் செய் தார்கள். இலங்கையில் குண்டுவெடிப்பு தாக்குதலை நடத்திய சஹ்ரான் ஹாஸ்மியுடன் முகநூல் களத்தில் நட்பாக இருந் தார். அவர் முகநூல் களத்தில் இடும் பதிவுகளுக்கு லைக்கு களும் கமெண்டுகளும் கொடுத்து வந்தார். அத்துடன் கோவையில் இசுலாமிய எதிரிகள் நிறைய இருக்கிறார்கள். அவர்களை பிரான்ஸ் தலைநகரான பாரீசில் ஐ.எஸ். அமைப்பு லாரி ஏற்றி பொதுமக்களை கொன் றது போல கொல்ல வேண்டும். வெடிகுண்டுகள் மூலம் தற்கொலை தாக்குதல் நடத்தி கொல்ல வேண்டும் என திட்டங்களை தீட்டினார். கோவை மட்டுமல்ல சென்னையிலும் இதுபோன்ற தாக்குதல்களை நடத்த வேண்டும் என்பதற்காக சென்னைக்கு வந்து போனார் என அந்த முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்கள்.


"கலிஃபா' என்கிற இயக்கம் கோவையில் அசாருதீன் தலைமையில் இயங்கி வருகிறது. இதில் ஜிஹாத் எனப்படும் இசுலாமிய மதத்திற்காக தியாகம் செய்யும் இளைஞர்கள் பலர் இணைந்திருக்கிறார்கள். இவர்களுக்கு கேரளா வழியாக சிரியா, ஆப்கானிஸ்தான் வரை தொடர் பிருக்கிறது. ஒசாமா பின்லேடனின் படையில் இருந்தவர்கள் கூட இவர்களுடன் தொடர்பில் இருக்கிறார்கள்'' என அசாருதீனை பற்றி விளக்கி னார்கள் தேசிய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள். கோவையில் அசாருதீன், சென்னையில் பிடிபட்ட இலங்கை நாட்டைச் சேர்ந்தவரான ரியாஸ் அபுபக்கர் என நீண்ட கைது தொடர்கிறது.

அது போன மாதம் என்பதை போல, இந்த மாதமும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்னையில் ஹசன் அலி, யூனூஸ் மரைக்காயர், ஹரிஷ் முகம் மது ஆகிய மூவரை கைது செய்திருக்கிறார்கள். நாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஹசன் அலியும், ஹரிஷும் "அன்சருல்லா' என்கிற இயக்கத்தை உருவாக்கி தமிழ்நாட்டில் குண்டுவெடிப்புகளை நடத்த திட்டமிட்டார்கள் என அவர்களை சிறைக்கு அனுப்பும் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இந்த கைதுகளோடு சையது முகம்மது புத்காரி என்பவர் நிர்வாகியாக இருக்கும் வாஹ்தாத்-இ-இஸ்லமி என்கிற அமைப்பின் மண்ணடி அலுவலகத்தையும் அவரது புரசைவாக்கம் பகுதியில் உள்ள வீட்டையும் தேசிய புலனாய்வு ஏஜென்சி ரெய்டு செய்துள்ளது.

அத்துடன் வளைகுடா நாடுகளிலிருந்து பதினான்கு பேரை தீவிரவாதிகளுடன் தொடர்பு டையவர்கள் என அந்த நாடுகள் இந்தியாவிற்கு திருப்பி அனுப்பி இருக்கின்றன. பெரும்பாலும் கேரளா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களான அந்த பதினைந்து நபர்களுக்கும் தமிழகத்தில் இயங்கும் தீவிரவாத அமைப்புகளுக்கும் என்ன தொடர்பு என ஆராய அவர்களை தமிழகத்திற்கு கொண்டு வந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரிக்க உள்ளதாக செய்திகள் பரவின.

இப்படி கொத்துக் கொத்தாக தீவிரவாதிகள் பிடிபடுகிறார்கள். அவர்கள் கேரளாவில் கைது செய்யப்பட்டாலும் சரி, டெல்லியில் கைது செய்யப்பட்டாலும் சரி தமிழகத்தோடு தொடர்புடையவர்களாக இருக்கிறார்கள். 2016ஆம் ஆண்டு தொடங்கி இன்று வரை நிகழும் இந்த போக்கில் இலங்கை குண்டுவெடிப்புக்குப் பிறகு தீவிரம் அதிகமாகிவிட்டது. தேசிய புலனாய்வு ஏஜென்சி மிக வேகமாக இதில் செயல்படுகிறது. இதன் காரணமென்னவென காவல்துறை அதிகாரிகளை கேட்டோம்.

தற்பொழுது தமிழக காவல்துறையில் உள்நாட்டு பாதுகாப்பிற்கென கண்ணன் என்பவரை டிஐ.ஜி.யாக நியமித்து இருக்கிறார்கள். இவர் இந்தியாவின் முன்னணி புலனாய்வு நிறுவனங் களான ஐ.பி., ரா ஆகிய நிறுவனங்களில் உயர் அதிகாரியாக பணியாற்றியவர். புலனாய்வில் மிகத் திறமையான இவர், உள்துறை அமைச்சரான அமித்ஷாவிற்கும் ராணுவ அமைச்சரான ராஜ்நாத் சிங்கிற்கும் மிக நெருக்கமானவர். இவர் மத்திய அரசுப் பணிக்கு போவதற்கு முன்பு கோவையை கலக்கிய ஃபாஸி நிதி நிறுவன மோசடியை கண்டுபிடித்ததோடு அதில் பிரமோத்குமார் என்கிற காவல்துறை அதிகாரிக்கும் உள்ள தொடர்பை அம்பலப்படுத்தியவர்.

கண்ணனின் ஒத்துழைப்போடு தேசிய புலனாய்வு ஏஜென்சி தமிழகம், கேரளா, இலங்கை, வளைகுடா நாடுகள் என ஒரு வலைத்தொடர்பில் இயங்கும் தீவிரவாதிகளை தேடி கண்டுபிடிக்கிறது. சென்னையில் கைது செய்யப்பட்ட ஹசன் அலியும் ஹரிஷ் மரைக்காயரும் நெருக்கமான உறவினர்கள். இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட லேப்டாப்புகள் மற்றும் மொபைல் மெமரி கார்டுகளில் தீவிரவாதம் தொடர்புடைய ஆவணங்கள் சிக்கியுள்ளன.

விழிப்புடன் இருந்திருக்காவிட்டால் இலங்கை யில் வெடித்தது போல பல குண்டுகள் தமிழகத் திலும் கேரளாவிலும் வெடித்திருக்கும். கண்ணன் உள்நாட்டு பாதுகாப்பு போலீஸ் அதிகாரியாக இருப்பதால் என்.ஐ.ஏ.வின் நடவடிக்கைக்கு தமிழக போலீசார் ஒத்துழைக்கிறார்கள். சென்னையில் கைது செய்யப்பட்டவர்களின் கோவை நண்பர்கள் வீடுகளில் என்.ஐ.ஏ.வுக்குப் பதிலாக தமிழக போலீசாரே களமிறங்கி சோதனை நடத்தியிருக் கிறார்கள்'' என்கிறார்கள்.

இந்த விஷயத்தில் நிறைய பொய் சொல் கிறது என்.ஐ.ஏ. ரெய்டு நடத்திய சென்னையில் உள்ள இசுலாமிய அமைப்பின் அலுவலகத்தில் தீவிரவாதத்துடன் தொடர்புடைய பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை'' என அந்த அமைப்பின் தலைவர் அலாவுதீன் மறுக்கிறார். தமிழகத்தில் தாமரையை மலரவைக்க எடுக்கும் நடவடிக் கையின் ஒரு பிரிவுதான் என்.ஐ.ஏ. ரெய்டுகள். இதில் புதிதாக ஒன்றுமில்லை என்கின்றன இசுலாமிய அமைப்புகள். ஆனாலும், தமிழகத்தில் வெடிகுண்டு ஆபத்து என்கிற பகீர் தகவலுடன் அதிர வைக்கும் அதிரடி ரெய்டுகளைத் தொடர்கிறது என்.ஐ.ஏ.