சீன ராணுவத்தினருக்கு இந்தி சொல்லித்தந்தார் !
பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்

இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டார். சிக்கிம் மாநிலத்தில், இமாலய மலைப்பகுதியில் உள்ள இந்திய - சீன எல்லைப் பகுதியான நாதுலாவுக்குச் சென்ற அவரைத் தங்கள் பக்கமிருந்து பார்த்த சீன வீரர்கள் நட்பாகக் கையசைத்ததாகவும், பதிலுக்கு நிர்மலா சீதாராமன் கையசைத்த பொழுது எடுத்த புகைப்படமென்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும், பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டிருந்த வீடியோ ஒன்றில், எல்லையில் இருந்த சீன வீரர்களுடன் உரையாடுகிறார் நிர்மலா சீதாராமன். சீன உயரதிகாரி, தன் அணியினர் இருவரை அறிமுகப்படுத்துகிறார். அவர்களிடம், 'நமஸ்தே' என்று இந்தியில் வணக்கம் தெரிவிக்கிறார் நிர்மலா சீதாராமன். ''நமஸ்தே' என்றால் என்னவென்று தெரியுமா?' என்று அவர்களிடம் கேட்கும்போது, இந்திய அதிகாரி ஒருவர் விளக்கம் சொல்ல முற்பட, அதைத் தடுத்து, 'அவர்களே சொல்லட்டும்' என்கிறார். முதல் இரண்டு முறை தவறி, பின் சரியாகக் கூறுகிறார்கள் சீன வீரர்கள். இப்படி நிகழ்ந்த ஒரு கலகலப்பான உரையாடலைப் பதிவு செய்திருக்கிறார்கள்.
(எல்லை தாண்டிச் செல்கிறது இந்தி... !!!)