பொங்கல் விழாவை முன்னிட்டு பேட்ட, விஸ்வாசம், ஆகிய படங்கள் வெளியாகின. வெளியான முதல் நாளிலிருந்தே யாருடைய படத்தின் வசூல் அதிகம் என்ற போட்டி நிலவி வந்தது. எந்த படம் முதலில் 100 கோடியைத் தாண்டும் என்ற போட்டியும் இருந்தது. ஆனால் தற்போது வெளியாகியுள்ள தகவல் அவற்றையெல்லாம் தூக்கி சாப்பிட்டுவிட்டது. ‘பொங்கல் பண்டிகையின்போது மது விற்பனையால் கிடைத்த வருவாய் குறித்து வெளியான அறிக்கைதான் அது.
பொதுவாகவே பண்டிகை நாட்களில் மது விற்பனை அதிகமாகத்தான் இருக்கும். இந்த முறை பொங்கல் விடுமுறையானது, வார விடுமுறையோடு சேர்த்து ஆறு நாட்களாக வந்தன. இதனால் மது விற்பனை தொடர்ந்து அதிகமாகவே இருந்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் கிட்டதட்ட 5,140 அரசு மதுபானக் கடைகள் உள்ளன. அதன்மூலம் போகி அன்று 143 கோடி, பொங்கலன்று 209 கோடி, மாட்டுப்பொங்கலன்று திருவள்ளுவர் தினம் என்பதால் அன்று விடுமுறை, காணும் பொங்கலன்று கிட்டதட்ட 100 கோடி என மொத்தமாக 500 கோடியைத் தாண்டும் இது கடந்தாண்டைவிட 10% அதிகம் என்றும் தெரிவித்துள்ளனர்.