ஜி20 மாநாடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து வழக்கறிஞர் தமிழ்வேந்தன் நம்மோடு கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கிறார்.
உதயநிதி பேசியதற்கு சங்கி கூட்டம் கதற வேண்டும். அதுதான் சரி. 20,000 புத்தகங்கள் படித்து கற்றறிந்தவர் அண்ணாமலை. சனாதன தர்மம் குறித்து பாடப் புத்தகத்தில் இருக்கும் வரிகளை அவர் கோடிட்டு காட்டுகிறார். அதற்கு முன்பு அது அதிமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட பாடத்திட்டம் என்பதை அவர் தெரிந்துகொள்ள வேண்டும். சேக்கிழார் எழுதிய கம்ப ராமாயணம் என்று சொல்லும் நிலையில், பாஜகவுக்கு அடிமையாக இருந்து ஆட்சி நடத்தி வந்த எடப்பாடி பழனிசாமிக்கு அதுகுறித்து தெரிய வாய்ப்பில்லை.
பார்ப்பனிய கூட்டத்துக்கும் அறிவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கைபர் போலன் கணவாய் வழியாக ஆடு மேய்த்துக்கொண்டு வந்தவர்கள் அவர்கள். அப்போது நாடு நம்மிடமும் ஆடு மாடுகள் அவர்களிடமும் இருந்தது. இப்போது நாடு அவர்களிடமும் ஆடு மாடுகள் நம்மிடமும் இருக்கிறது. அறிவாளியாக இருந்த தமிழ் சமூகத்தில் விஷத்தைப் பரப்பியது அவர்கள்தான். தீண்டாமை, உடன்கட்டை ஏறுதல், குழந்தைத் திருமணம் உள்ளிட்ட பல்வேறு தீமைகளை சமுதாயத்தில் புகுத்தினர். தமிழ் கலாச்சாரம் தான் இந்தியா முழுமைக்கும் பரவியது.
பார்ப்பனர்களுக்கு தனியாக கலாச்சாரம் என்கிற ஒன்று இல்லை. முருகர் தமிழ் கடவுள். அவருடைய கோயில்களையும் இப்போது பிராமணர்கள் ஆக்கிரமிப்பு செய்துவிட்டனர். ஞானப்பழம் விவகாரத்தில் முருகர் அப்போதே கம்யூனிஸ்ட் போல் போராட்டம் செய்தவர். அனைவரும் இங்கு ஒன்றுதான் என்று சொல்கிறது தமிழ்மறை. அதை ஏற்றுக்கொண்டவர்கள் நாங்கள். ஜி20 மாநாட்டின்போது ஏழைகள் வசிக்கும் பகுதிகளை திரை வைத்து மறைக்கிறார்கள். நியாயமாக அந்த மக்களுக்கு இவர்கள் புதிய வீடுகளைக் கட்டித் தந்திருக்க வேண்டும்.
மோடியின் ஆட்சி எப்போது முடியும் என்கிற எண்ணம் அனைவருக்கும் வந்துவிட்டது. அவர் சீக்கிரமாக ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும். ஆட்சி மாற்றம் நடக்கட்டும். அந்தக் காலத்தில் பெண்கள் கற்பைக் காப்பாற்றிக் கொள்வதற்காக உடன்கட்டை ஏறினார்கள் என்கிறார் அண்ணாமலை. கற்பு என்பது பெண்களுக்கு மட்டும் உண்டானது அல்ல. அது ஆண்களுக்கும் இருக்கிறது. மனைவி இறந்தால் ஆண்கள் ஏன் உடன்கட்டை ஏறவில்லை? இதுதான் சனாதனம். இதை வெள்ளைக்காரர் வெல்லஸ்லி பிரபு காட்டுமிராண்டித்தனம் என்று கூறினார்.
முழு பேட்டியை வீடியோவாக கீழே உள்ள லிங்க்கில் காணலாம்...