Skip to main content

எதுக்குடா எங்கள அடிக்கிறீங்க...

Published on 23/05/2018 | Edited on 23/05/2018
sterlite poetry

 

எதுக்குடா எங்கள அடிக்கிறீங்க 
எதுக்குடா எங்கள அடிக்கிறீங்க 

 

எவனை காப்பாத்த துடிக்கிறீங்க?
எதுக்குடா எங்கள அடிக்கிறீங்க 

 

குடிக்கிற தண்ணிய விஷமா மாத்திப்புட்டான்
சுவாசிக்கிற காத்துல தாமிரத்த கலந்துவிட்டான்  
மூச்சுத் தெணறுதுன்னு சேர்ந்து நின்னு கத்துனோம் 
எதுக்குடா எங்கள அடிக்கிறீங்க 

 

வீட்டுக்கு வந்து வணக்கம் போட்டதைப் பாத்தோம்  
உனக்கு ஓட்டைப் போட்டு நாட்டைக் கொடுத்தோம்
விசுவாசத்தை வேற ஒரு முதலாளிக்குக் காட்டி 
எதுக்குடா எங்கள அடிக்கிறீங்க 

 

ஆத்த சுரண்டுனீங்க, ரோட்டை திருடுனீங்க 
வச்சிருந்த மிச்ச மீதி காசையும் புடுங்குனீங்க 
வரின்னு சொல்லி உயிரையும் வாங்குனீங்க 
எதுக்குடா எங்கள அடிக்கிறீங்க

 

ஊரு உலகமெல்லாம் தொரத்தி விட்டவன் 
இங்க வந்து கொட்டகை போடுறான் 
மண்ண, தண்ணிய, மனுசன உறிஞ்சுறான்
எதுக்குடா, எங்கள அடிக்கிறீங்க

 

பறக்கும் குதிரை, பீனீக்ஸ்ன்னு சொன்ன 
தெர்மோகோலை கொண்டுட்டு வந்து நின்ன 
இட்லி சாப்பிடாங்கன்னு சொன்ன
நாங்க எதையுமே எதிர்த்துக் கேக்கல 

 

வீட்டுக்கு ஒரு உயிர புத்துநோய்க்குத் தந்தோம் 
வித விதமா நோய் வந்து நொந்தோம் - இப்ப 
மூச்சுத் தெணறுதுன்னு சேர்ந்து நின்னு கத்துனோம் 
எதுக்குடா எங்கள அடிக்கிறீங்க 
எவனை காப்பாத்த துடிக்கிறீங்க?