அப்பல்லோ மருத்துவமனையில் அறுவை சிகிச்சை முடிந்து ஓய்வில் இருக்கும் கமல்ஹாசனை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
சென்னை அப்போலோ மருத்துவமனையில் நடிகர் கமல்ஹாசனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, வலது காலில் பொறுத்தப்பட்டிருந்த டைட்டேனியம் கம்பி அகற்றப்பட்டது. கடந்த 2016ம் ஆண்டின்போது தனது வீட்டில் உள்ள மாடியில் தடுக்கி விழுந்ததால் ஏற்பட்ட வலது காலில் காயம் ஏற்பட்டது. அந்த காயத்திற்கு அப்போது நடந்த அறுவை சிகிச்சையில்தான் காலில் டைட்டேனியம் கம்பி பொருத்தப்பட்டது. அந்த கம்பிதான் இன்று அகற்றப்பட்டது. அறுவை சிகிக்ச்சைக்கு பின்னர் கமல்ஹாசன் ஓய்வில் உள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஓய்வில் இருக்கும் கமல்ஹாசனை சந்தித்து நலம் விசாரித்தார். அவருடன் துரைமுருகனும் சென்றிருந்தார்.
இதுகுறித்து ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘’நண்பர் 'கலைஞானி' கமல்ஹாசன் அவர்களை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தேன். விரைவில் அவர் முழுநலம் பெற வேண்டுமென என் விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்!’’என்று தெரிவித்துள்ளார்.