Skip to main content

ரஜினி மீது வழக்கு பதியக்கோரிய மனுவை நீதிபதி ஏன் நிராகரித்தார்?

Published on 10/03/2020 | Edited on 10/03/2020
r

 

துக்ளக் பத்திரிகையின் பொன்விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், சேலத்தில் 1971 ஆம் ஆண்டில் பெரியார் பங்கேற்ற பேரணியில் ராமர் படங்கள் அவமதிக்கப்பட்டதாக கூறினார்.


இந்த பேச்சு பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.  ரஜினி தான் பேசியது தவறு என்ற் மன்னிப்பு கேட்க வேண்டும்.  இல்லையென்றால் அவர் மீது வழக்கு தொடரப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.  ஆனால், தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று அதிரடியாக அறிவித்தார் ரஜினி.

 

இதன்பின்னர்,  ‘பெரியாரைப்பற்றி நடிகர் ரஜினிகாந்த் அவதூறாக பேசியதாக கூறி அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்’ என்று கோரி திராவிடர் விடுதலை கழகம் சார்பில் உமாபதி என்பவர் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில்  மனுதாக்கல் செய்தார். அம்மனு மீதான விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு கூறப்பட்டது.   திராவிடர் விடுதலை கழகம் சார்பில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. வழக்கை, கட்சி சார்பில் தொடரக்கூடாது என்று கூறி மனுவை நிராகரித்ததற்கான காரணத்தை கூறினார் நீதிபதி.

 

இதையடுத்து, மேல்முறையீடு செய்யப்படும் என்று திராவிடர் விடுதலை கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

சார்ந்த செய்திகள்