வழக்கம்போல் தலைப்புச் செய்தியாகியிருக்கிறார். வழக்கம்போல் தமிழக அரசியல் களத்தை பரபரப்பாக்கியிருக்கிறார் இன்னமும் முழுமையாக அரசியலுக்கு வராத ரஜினி. அமெரிக்காவில் ரஜினி இருந்த போது, ராகவேந்திரா மண்டபத்தைத் தவிர்த்துவிட்டு, ஓட்டல் ஒன்றில் சில மா.செ.க்களை வரவழைத்து ஆலோசனைக் கூட்டம் போட்டார் தூத்துக்குடி மா.செ. ஸ்டாலின். அந்தக் கூட்டம் முடிந்து ஊர் திரும்பும்போதுதான் சாலை விபத்தில் மரண மடைந்தார் தர்மபுரி மா.செ.மகேந்திரன். விஷயம் பெரிதாகிவிடக் கூடாது என்பதற்காக, மகேந்திரன் குடும்பத்திற்கு ஒரு தொகையைக் கொடுத்து சரிக்கட்டினார்கள் தலைமை நிர்வாகிகள் சிலர்.
மகேந்திரன் மறைந்து ஒன்பதாம் நாள், தர்மபுரியில் நடந்த நினைவேந்தல் கூட்டத்தில் ரஜினி மக்கள் மன்றத்தின் தலைமை நிர்வாகியான வி.எம்.சுதாகர், மா.செ.ஸ்டாலின், ரிடையர்டு ஐ.பி.எஸ். அதிகாரி ராஜசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தை நடத்தும் பொறுப்பை ஏற்றுக் கொண்டு சில லட்சங்களை செலவு செய்தார் பக்கத்து மாவட்டமான கிருஷ்ண கிரி மா.செ.மதியழகன். அமெரிக்காவிலிருந்து தமிழகம் திரும்பிய ரஜினியைச் சந்திக்க பல்வேறு வழிகளில் முயற்சித்தும் முடியாததால் தி.மு.க.விற்கு தாவிவிட்டார் மதியழகன்.
இந்த விவகாரங்களோடு, கடலூர் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து மா.செ.க்களை நியமித்து, மீண்டும் ஒரே மாவட்டமாக்கி, ஒரு மா.செ.வை நியமித்து என ஏகப்பட்ட குளறுபடி களும் ரஜினிக்குத் தெரிந்தது. தனது இளையமகள் சௌந்தர்யாவின் திருமணம் முடிந்ததும் பார்த்துக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தார் ரஜினி. சீரும் சிறப்புமாக திருமணம் முடிந்த ஒரு வாரம் கழித்து, கடந்த 17-ஆம் தேதி அனைத்து மா.செ.க் களும் ராகவேந்திரா மண்டபத்தில் ஆஜராகு மாறு .ர.ம.ம.வின் தலைமை யிலிருந்து தகவல் போனது.
காலை 8 மணிக்கு மண்டபத்தில் அவர்கள் ஆஜரானபோது, அனை வரும் போயஸ் கார்டனில் இருக்கும் ரஜினி வீட்டிற்குப் போகுமாறு மண்டபத்தில் சொல்லியிருக்கிறார்கள். காலை 9 மணிக்கு அனை வரும் ரஜினி வீட்டிற்குச் சென்றதும் 9.30-க்கு ஆலோசனை கூட்டம் ஆரம்பித் துள்ளது. எப்போதும் ரஜினியின் இடப்பக்கம் வி.எம்.சுதாகர், ராஜசேகர், ஸ்டாலின் ஆகியோர் அமர்வார்கள். ஆனால் இந்த முறை மா.செ.க்களுடன் அமரவைக்கப்பட்டார் ஸ்டாலின். ராஜசேகர் இந்தக் கூட்டத்திற்கு அழைக்கப்படாததால், சுதாகர் மட்டுமே, ரஜினியின் இடப்பக்கம் அமர்ந்திருந்தார்.
தர்மபுரி மகேந்திரன் மறைவு குறித்து தனது கவலையைப் பகிர்ந்து கொண்ட ரஜினி, எம்.பி.தேர்தலுக்குள் கட்சி தொடங்கும் ஐடியா இல்லை என்பதைச் சொல்லிவிட்டு, தங்களது கருத்துக்களை சொல்லலாம் என மா.செ.க்களிடம் கூறினார். இராமநாதபுரம் மா.செ. செந்தில் ஆனந்த், சிவகங்கை மா.செ.ராமேஸ்வரன், தேனி மா.செ. கணேஷ் ஆகிய மூவர் மட்டும், "எம்.பி. தேர்தலில் நாம் போட்டியிடலாம்' என்றதும்,மற்ற மா.செ.க்களிடமிருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
""எம்.பி. எலெக்ஷன்னாலே காங்கிரசா, பி.ஜே.பி.யான்னுதான் மக்கள் பார்ப்பார்கள். இப்ப நாம கட்சி ஆரம்பிச்சு போட்டியிட்டா நம்மோட உழைப்பும் வீணாப் போயிரும், அதைவிட முக்கியம், சென்ட்ரலில் வரும் ரூலிங் பார்ட்டியையும் பகைச் சுக்க வேண்டியிருக்கும். நீங்களும் யாரையும் பகைச்சுக்கிராம, உங்க வேலையைப் பாருங்க, குடும் பத்தைக் கவனிங்க. நானும் ஏப்ர லில் ஷூட்டிங் போறேன். எல்லோரும் "பேட்ட'’படம் பார்த்தீங்களா, எப்படி இருந்துச்சு. சட்டமன்றத் தேர்தல்தான் நம்மோட எய்ம்கிறதால, அடுத்த ஆகஸ்ட்ல கட்சி ஆரம்பிக் கிறோம், எலெக்ஷன்ல நிக் கிறோம், ஜெயிக்கிறோம். பெரிய பெரிய ஆளுங்கெல்லாம் நம்ம கட்சிக்கு வருவாங்க. ரஜினி மக்கள் மன்றத்துக்கு புது நிர்வாகி கள் யாரையும் நியமிக்க வேண்டாம். எந்தப் பிரச்சனையாக இருந் தாலும் இனிமேல் சுதாகரிடம் மட்டும் ஆலோசனை கேட்டு நடந்துக்கங்க. நன்றி வணக்கம்'' எனச் சொல்லி தனது பேச்சை நிறைவு செய்திருக்கிறார் ரஜினி.
ஒருமணி நேரம் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டம் முடிந்து மா.செ.க்களெல்லாம் கிளம்பிச் சென்ற கொஞ்ச நேரத்திலேயே, ""எம்.பி. தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை'' என்ற ரஜினியின் அறிக்கை வெளியானது. கூட்டத்தில் கலந்துகொண்ட சில மா.செ.க்களிடம் பேசினோம். “""எங்க தலைவர் எதிர்பார்த்த மாதிரி பூத் கமிட்டி அமைக்கும் வேலை சுணக்கமா யிருச்சு. பல மாவட்டங்களில் அமைக் கப்பட்ட பூத் கமிட்டி ஆட்களை அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் பேக்கேஜ் சிஸ்டத்துல வளைச்சுட்டாங்க.
அதனால இன்னும் ஒரு வரு ஷம் ஆனாத்தான் எல்லாம் சரிப் படும் என்ற முடிவுக்கு வந்துட்ட தாலதான் இந்த முடிவை எடுத்துருக் காரு. இப்பவும் பார்த்தீங்கன்னா... "பணம், பதவியை எதிர்பார்க்குறவங்க இருந்தா இப்பவே வெளியே போயி ருங்கன்னு சொல்லிட்டு, நீங்களே நினைச்சுப் பார்க்காத பெரிய ஆளுங்கெல்லாம் வருவாங்க'ன்னு சொல்லிருக்காரு தலைவரு. "அப்படின்னா அவர்களுக்குத்தான் பதவியா, எம்.எல்.ஏ. சீட்டா? அல்லது எதையும் எதிர்பார்க்காம அந்த பெரிய மனுஷங்க வரப்போறாங் களா?''’என நம்மிடமே கேட்டார்கள்.
ரஜினி நல்லவழி காட்டுவார் என்ற நம்பிக்கை நிறைந்திருப்பதால் இன்னமும் எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள் நிர்வாகிகள்.
மா.செ.க்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் முடிந்த மறுநாள், தர்மபுரி மா.செ. மகேந் திரனின் குடும்பத்தினரை தனது இல்லத்துக்கு வரவழைத்துப் பெரிய அளவிலான நிதி உதவியை வழங்கியதோடு, மகேந்திரன் மகன்களின் படிப்புச் செலவையும் ஏற்றுள்ளார் ரஜினி.