Skip to main content

7 தொகுதிகளில் 5 குடும்பத்திற்கா??? ராமதாஸின் முடிவால் அதிர்ச்சியில் தொண்டர்கள்...

Published on 09/03/2019 | Edited on 09/03/2019

நாடாளுமன்ற தேர்தலில் பாமகவிற்கு 7 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்ய சபா சீட் ஆகியவை ஒதுக்கப்பட்டுள்ளன. அதிமுக கூட்டணி இறுதியாகும் நிலையில் உள்ளது.
 

savumiya


தேமுதிகவை எதிர்பார்த்து பாஜக இருப்பதால் அதிமுகவினால் கூட்டணியை இறுதிசெய்ய முடியவில்லை. ஒரு ராஜ்ய சபா சீட் அன்புமணிக்கு என உறுதியானதால் மீதியிருக்கும் தொகுதிகளில் கட்சியை சார்ந்தவர்கள் போட்டியிடலாம் என நினைத்தனர். ஆனால் கட்சி தலைமையின் முடிவு வேறொன்றாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  பாமகவின் அதிக வாக்குவங்கி தொகுதியான தர்மபுரியில் அன்புமணியின் மனைவி சவுமியா போட்டியிடுகிறார். மேலும், ராமதாஸின் நெருங்கிய உறவினரான வேலுவை அரக்கோணத்தில் நிறுத்தவும், மற்றொரு உறவினரான தன்ராஜை கள்ளக்குறிச்சியில் நிறுத்தவும், மத்திய சென்னையில் மற்றொரு உறவினரை நிறுத்தவும், விழுப்புரம் தனித்தொகுதி என்பதால் அதில் நெல்லையைச் சேர்ந்த வடிவேல் ராவணனை நிறுத்தவும் முடிவுசெய்துள்ளனர்.
 

இந்த முடிவால் அதிர்ச்சியடைந்துள்ளனர், அக்கட்சியின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள். மேலும் "தன்னைத்தவிர தன் குடும்பத்தைச் சேர்ந்த யாரும் கட்சிக்குள் வரமாட்டார்கள், அப்படி வந்தால் என்னை முச்சந்தியில் நிறுத்தி சவுக்கால் அடியுங்கள் என ராமதாஸ் கூறினார். ஆனால் தற்போது 7 தொகுதியில் 5 அவரது குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கே வழங்கப்பட்டுள்ளது. இப்படியே போனால் குடும்பத்தை தவிர வேறு யாருக்கும் இடம் தரமாட்டார்கள் போல." என புலம்பி வருகின்றனர்.