தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான அரசியல் களம் சூடுப்பிடித்துள்ளது என்று கூறலாம். ஏனெனில் நேற்று (17/03/2019) மாலை 6.30 மணியளவில் திமுக போட்டியிடும் மக்களவை தொகுதியின் வேட்பாளர்கள் பட்டியல் மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியீட்டார். இதனை தொடர்ந்து நேற்று நள்ளிரவு 10.30 மணியளவில் அதிமுக மக்களவை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் அறிவித்தனர்.
இதனால் இன்று முதல் தமிழகத்தில் பிரச்சார களம் சூடுப்பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இன்னும் தேர்தலுக்கு சுமார் 29 நாட்களே உள்ள நிலையில் தொகுதி முழுவதும் சென்று மக்களை சந்திக்க குறைந்த பட்சம் ஒரு மாதமாவது வேண்டும். ஆனால் இந்த தேர்தல் முன் கூட்டியே நடைப்பெற உள்ளதால் வேட்பாளர்கள் காலை முதலே பிரச்சாரம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் பகலில் பிரச்சாரம் செய்வது சற்று கடினம். தமிழகத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தேசிய தலைவர்கள் பிரச்சாரத்திற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பி.சந்தோஷ் ,சேலம்.