Skip to main content

EXCLUSIVE: என்னை மிரட்டுகிறார்கள் -நிர்மலா தேவி!!! வாயைப் பொத்தி இழுத்துச்சென்ற காவல்துறையினர்...

Published on 30/01/2019 | Edited on 30/01/2019

 

nirmala devi

 

திருவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் ஆஜராக, மதுரை மத்திய சிறையிலிருந்து நிர்மலா தேவி அழைத்துவரப்பட்டார். முதன்முதலாக நிர்மலா தேவி பத்திரிகையாளர்களிடம் பேச முற்பட்டார். பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளிக்க தொடங்கினார். 
 

அப்போது அவர், 
 

என்பேரில் வந்த வாக்குமூலம் பொய், சிபிசிஐடி காவல்துறையினர் வெள்ளைத் தாளில் மட்டுமே என்னிடம் கையெழுத்து வாங்கினார்கள். இன்னும் நிறைய விஷயங்களும், ஆதாரங்களும் இருக்கின்றன, அதையெல்லாம் வக்கீல் பசுவன் பாண்டியனிடம் கேட்டுக்கொள்ளுங்கள் என்றார். உங்களுக்கு ஜாமீன் வழங்கப்படாமல் இருப்பதன் பின்னணியில் யாரும் இருக்கிறார்களா என கேட்டபோது இருக்கலாம் என்றும், உயர்மட்ட அதிகாரிகளின் இடையூறு இருக்கிறது என்றும் கூறினார். 
 

உங்களுக்கு மிரட்டல் இருக்கிறதா எனக்கேட்டபோது, எனக்கு மிரட்டல்கள் இருக்கின்றன எனக்கூறினார். அப்போது எஸ்கார்ட் போலிஸ் ஜெயக்கொடி என்பவர் நிர்மலாதேவியின் வாயை பொத்தினார், அதைத்தொடர்ந்து சப் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி உள்ளிட்ட காவல்துறையினர் அவரிடம் கடுமையாக நடந்து கையைப்பிடித்து வேகமாக இழுத்து சென்றுவிட்டனர். இவையனைத்தும் பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட அனைவரின் முன்னாலேயே நடந்தது. மேலும் பத்திரிகையாளர்களை உள்ளே அனுமதிக்கக்கூடாது என கடுமையாக தெரிவித்தும்விட்டனர். இதனால் வழக்கமாக பத்திரிகையாளர்களை அனுமதிக்கும் தூரம்வரைக்கூட உள்ளே அனுமதிக்கவில்லை. 
 

இன்று நிர்மலா தேவியிடம் காவல்துறை நடந்துகொண்டவிதம் மிகக்கடுமையாகவே இருந்தது. உண்மையை சொல்லக்கூடாது என்றுதானே இத்தனை நாள் வைத்திருந்தோம். அதையும் மீறி உண்மையை கூறிவிட்டாயே என்ற கோபத்தையும், காட்டத்தையும் பத்திரிகையாளர்களின் முன்னாலேயே வெளிபடுத்தினார்கள்.

 

செய்தி: சி.என்.ராமகிருஷ்ணன், அண்ணல்

புகைப்படம்: ராம் குமார்

 

 

 

Next Story

நிர்மலாதேவிக்கு மீண்டும் பிடிவாரண்ட்!

Published on 28/01/2020 | Edited on 28/01/2020

அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி மாணவிகளிடம் செல்போனில் பேசி தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல முயற்சித்த வழக்கில், ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் இன்று நிர்மலாதேவி ஆஜராகாத நிலையில், அவருக்குப் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார் நீதிபதி பரிமளா.
 

Warrant Again for Nirmaladevi

 

ஏற்கனவே ஒருதடவை, அதாவது கடந்த நவம்பர் 18-ஆம் தேதி நிர்மலாதேவிக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு, அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, ஜாமின் பெற்று வெளிவந்தார் என்பதும், அவர் சார்பில் ஆஜராகி வந்த வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் இந்த வழக்கிலிருந்து விலகிவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உதவி பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் இன்று ஆஜரான நிலையில், இவ்வழக்கு பிப்ரவரி 21-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

 

Next Story

நிர்மலாதேவி வழக்கை வேறு மாநிலத்தில் நடத்த வேண்டும்! -விரைவில் உச்ச நீதிமன்றத்தில் மனு!

Published on 13/12/2019 | Edited on 13/12/2019

அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் பேராசிரியர் நிர்மலாதேவி, உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி மற்றும் வழக்கின் சாட்சியான அக்கல்லூரியின் செயலாளர் ராமசாமி ஆகியோர் இன்று ஆஜரானார்கள்.

 

Nirmaladevi to be prosecuted in a different state! Petition to Supreme Court soon


கல்லூரியின் செயலாளர் ராமசாமி அரசு தரப்பினரால் மூடிய அறையில் விசாரிக்கப்பட்டார். நிர்மலாதேவியை அரசு தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை நடத்த தடை விதிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அம்மனுவை விசாரித்த நீதிபதி 27-ஆம் தேதி வரை குறுக்கு விசாரணை செய்ய தடை விதித்தார். இவ்வழக்கில் வரும் 27-ஆம் தேதி மூவரும் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தது அந்நீதிமன்றம்.

நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நிர்மலாதேவியின் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் –

 

Nirmaladevi to be prosecuted in a different state! Petition to Supreme Court soon

 

“இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நடந்தால் பேராசிரியர் நிர்மலாதேவிக்கு தண்டனைதான் கிடைக்கும். நிர்மலாதேவி வழக்கு சம்பந்தமாக பத்திரிகையாளர்கள் செய்தி வெளியிட தடை விதிக்க வேண்டும் என அரசு தரப்பில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை விசாரித்த நீதிபதி 1 முதல் 32 சாட்சிகளை படம் எடுக்கக்கூடாது என்ற நிபந்தனையுடன், நிர்மலாதேவி குறித்து செய்தியாளர்கள் செய்தி வெளியிட தடையில்லை என்று தெரிவித்தார். நிர்மலாதேவி வழக்கில் தமிழக ஆளுநரும் அமைச்சர்களும் தொடர்பில் உள்ளதால், நிர்மலாதேவிக்கு நியாயம் கிடைக்காது என்பதாலும், தண்டனைதான் கிடைக்குமென்று கருதுவதாலும் வேறு மாநிலத்தில் இந்த வழக்கை நடத்த வேண்டுமென்று உச்ச நீதிமன்றத்தில் இன்னும் ஒருசில தினங்களில் மனு தாக்கல் செய்யவுள்ளோம்.” என்றார்.