கமலுக்கும் 'கமலத்துக்கும்' தொடர்பா?
கமல் என்னவோ ரஜினியை சீண்டிவிட்டார் என்று ஓவரா கதை கட்டி ஓடவிடுகிறார்கள்...
கமல் பேசியதை ரஜினி நன்றாக ரசித்து கைதட்டி ரசித்தார்...
கமல் அப்படியெல்லாம் ரஜினியை நோகடித்துவிட மாட்டார்...
அவர்களுக்குள் பரஸ்பரம் புரிதலோடுதான் இருக்கிறார்கள்...
அப்புறம் இன்னொரு விஷயம், ஒங்க திராவிடம் எங்களுக்கு வேண்டாம் என்றும் திராவிடர்களின் திராவிடம்தான் எங்களுக்கு வேண்டும் என்றும் சிலர் பதிவுகளைப் போடுகிறார்கள்...
பூணூலைக் கழற்றிவிட்டு, சாதித்திமிரை உதறிவிட்டு பெரியாரையும் மார்க்ஸையும் தூக்கிச் சுமக்க தயாரானால்கூட...
அதாவது தன்னை பாப்பான் என்று சொல்லாவிட்டாலும்...
பாப்பான் என்று முத்திரைகுத்தி வெறுப்பேற்றும் போக்கு நல்லதா என்பதை அவர்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.
ஒரு பாப்பனர் தன்னை தமிழன் என்று வேண்டுமானால் சொல்லுவார், திராவிடன் என்று சொல்லவே மாட்டார்...
அதுபோல, பாப்பனர்கள் காலம் பூராவும் எதிர்த்த பெரியாரை பாப்பனீயத்தை ஆதரிப்போர் நெருங்கவே அஞ்சுவார்கள்...
ஏனென்றால் பெரியார் கர்ணன் வைத்திருந்த சால்வையைப் போன்றவர்...
போலிகள் போர்த்தினால் எரிந்துபோவார்கள்...
-ஆதனூர் சோழன்