கலாம் கீதம்!
பல்லவி :
அட உழைச்சா நீதான் ஜெயிக்கலாம்
நீ நெனச்சா தேசம் உயர்த்தலாம் -நாம்
அதனால் உலகை அசைக்கலாம் அசைக்கலாம் வா!
நீ பகலும் கனவைக் காணலாம்
நாம் நாளும் திறமை வளர்க்கலாம்-அட
விண்ணில் நீயும் நடக்கலாம் நடக்கலாம் வா!
நேரத்தை கணக்கிடு தூரத்தை மறந்திடு
உண்மையா உழைத்திடு வெற்றியைத் தேடிடு.!
போய்ச் சேரும் தூரம் ஏராளம் வாவா படிக்கலாம்.!
பொழுதுக்குள்ள நிலவைப் புடிக்கனும் வாவா பறக்கலாம்.!
நாடும் நாமும் சேர்ந்து முன்னேற வாவா உழைக்கலாம்.!
நாளை வானில் ராக்கெட் நீதான் வா அப்துல்கலாம்.!
சரணம்1
தோல்வியைத் தாங்கலாம் நாளும் கலங்கி நீ போகலாம்..
சாதனைப் படைத்திட வேகம் கொள்ளலாம்..!
ஆற்றலும் பாய்ச்சலும் அடைக்காத்துதான் வைக்கலாம்
ஆயிரம் தடைகளை நாளைத் தகர்க்கலாம்..!
நேரம் வரும் காலம் முன்னரே செயல் துவக்கலாம்.!
நாளை சின்னப் புள்ளி நீ பெரும்புள்ளியாகலாம்.!
ஓ..தோழா உனக்கான தலைவிதியைத் தீர்மானி
வலி தாங்கி அட ஜெயிச்சா நீ அப்துல்கலாம்..!
சரணம்2
காலால் செய்திடும் வேலைக் கையால் செய்யலாம்..
எழுத்தால் கேட்பதை எழுந்துக் கேட்கலாம்.!
போனில் சொல்வதைக் கொஞ்சம் மாற்றிப் பார்க்கலாம்..
நேரில் போவதால் எதுவும் முடிக்கலாம்.!
உந்தன் நிழல் மூடிடத்தானே பகல் இரவாகலாம்.!
வெற்றி என்னும் வெளிச்சம் வந்தால் பெரியவனாகலாம்.!
ஓ..தோழா உனக்கான குறிக்கோளில் தெளிவாக வா
உழைத்து அட ஜெயிச்சா நீ அப்துல்கலாம்..!
பாடலாசிரியர் வேல்முருகன்

அப்துல் கலாமுடன் வேல்முருகன்
குறிப்பு:
இந்த பாடல் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி திரு.அப்துல்கலாம் அவர்களுடைய 83வது பிறந்த நாளான அக்டோபர் 15- 2013 ம் வருடம் புதுச்சேரியில் அப்துல்கலாம் கீதமாக வெளியிடப்பட்டது. அப்போதைய புதுச்சேரி முதல்வர் திரு. ரங்கசாமி அவர்கள் வெளியிட, அப்துல்கலாம் அவர்களின் பேரன் திரு. ஷேக் சலீம் அவர்கள் பெற்றுக்கொண்டார். 'நேரம்', 'பிரேமம்' போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்த ராஜேஷ்முருகேசன் இப்பாடலுக்கு இசையமைக்க, வேல்முருகன் இந்தப் பாடலை எழுதியுள்ளார். அஜீஸ் அசோக் இப்பாடலை பாடியுள்ளார். அஸிஸ்ட் வோர்ல்ட் ரெக்கார்ட் என்ற நிறுவனம் வெளியிட்டது.