ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் ஆவலாக கூடியிருந்தபோது கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் (ஓ.பி.எஸ்.), துணை ஒருங்கிணைப்பாளரும் (ஈ.பி.எஸ்.) சேர்ந்து (ஆனால் தனித்தனி ரிமோட் மூலம்) சிலை திறப்பிற்கான பட்டனை அழுத்த சிலையை சுற்றியுள்ள துணி இறங்கியது. முதலில் அதிமுகவின் சின்னமான இரட்டை இலையை குறிக்கும் இரட்டை விரல்கள் தெரிய ஆரம்பித்தன. அப்போதே தொண்டர்கள் அனைவரும் ஆரவாரம் எழுப்ப ஆரம்பித்துவிட்டனர். அப்படியே படிப்படியாக முகம் தெரிய ஆரம்பிக்கும்போது தொண்டர்களின் ஆரவாரத்துடன் சேர்ந்து நெட்டிசன்களின் ஆரவாரமும் பெருக ஆரம்பித்துவிட்டது. காரணம் ஜெயலலிதாவின் சிலை அவரைப்போல இல்லை. அப்போதிருந்தே மீம்ஸ் வர ஆரம்பித்துவிட்டது இன்றுவரை ஓயவில்லை. அதில் சிறந்த மீம்ஸ் இதோ...
இப்படி ஒவ்வொரு மாதமும் மீம்ஸ் என்ற பெயரில் எதாவது ஒரு காமடி கான்செப்ட்களை உருவாக்கி கலக்க போவது யாரு? அசத்த போவது யாரு? போன்ற நிகழ்ச்சிகளை விட அதிக சிரிப்புகளை உருவாக்கும் இவர்களின் சிரிப்பு சேவையை சிரித்துக்கொண்டே பிரமிப்புடன் பார்த்து வருகிறார்கள் மக்கள்.