Skip to main content

பத்தாயிரம் பெண்களின் நிர்வாண குளியல் வீடியோ; ஜப்பானை அதிர வைத்த மோசடி கும்பல்

Published on 17/02/2023 | Edited on 17/02/2023

 

hot water spring japan voyeurism

 

இந்தியாவிற்கு காஷ்மீர், சிம்லா, ஊட்டி, கொடைக்கானல் போன்றவை எப்படி இயற்கையின் வரங்களாக கிடைத்ததோ, அதே போல் ஜப்பானுக்கு அந்த நாட்டில் உள்ள வெந்நீரூற்றுகள். நாம் கோடை காலங்களில் ஊட்டிக்கும் கொடைக்கானலுக்கும் செல்வது போல் குளிர்நாடான ஜப்பானில் அங்கு வாழும் மக்கள் அங்கு இயற்கையாகவே அமைந்த வெந்நீரூற்றுகளுக்கு சென்று நீராடி மகிழ்வதை வழக்கமாக செய்து வருகிறார்கள். உள்ளூர் மக்கள் மட்டுமின்றி பல வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கும் ஜப்பானின் வெந்நீரூற்றுகளின் மீது தீராத மோகம் உண்டு. 

 

ஜப்பானுக்கு செல்லும் பல வெளிநாட்டு பயணிகள் வெந்நீர் குளியலை மிஸ் செய்வதே இல்லை. ஜப்பானில் பொதுவாக ஒரே இடத்தில் பல நீரூற்றுகள் இருப்பதால் ஆண்கள் தனியாகவும் பெண்கள் தனியாகவும் குளிப்பது தான் பொதுவான நடைமுறையாக இருந்தாலும் சில இடங்களில் சேர்ந்து குளிப்பதும் உண்டு. அப்படி தனியாக குளிக்கும்போது கொஞ்சம் சுதந்திரமாக குளிப்பதை விரும்பும் சில பெண்கள் ஆடை இல்லாமல் குளிப்பதை வழக்கமாக கொண்டிருந்திருக்கிறார்கள். 

 

இப்படி பெண்கள் ஆடை இல்லாமல் குளிப்பதை கடந்த 30 வருடங்களாக ஒரு கும்பல் திருட்டுத்தனமாக மறைந்திருந்து புகைப்படங்களாகவும் வீடியோக்களாகவும் எடுத்து வந்திருக்கிறார்கள். கடந்த முப்பது வருடங்களாக செயல்பட்டு வந்த இந்த திருட்டு கும்பலை சமீபத்தில்தான் அதிரடியாக கைது செய்திருக்கிறது ஜப்பான் காவல்துறை. ஜப்பான் காவல்துறையின் விசாரணையில் 50 வயதான கரின் சைடோ என்பவன் தான் அந்த 16 பேர் கொண்ட மோசடி கும்பலின் தலைவன் என்பதும், கரின் சைடோ தனது இருபது வயதில் இருந்து இந்த திருட்டு வேலையில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிய வந்திருக்கிறது. இருபது வயதில் இந்த தொழிலைத் தொடங்கிய கரின் சைடோ, இதுவரைக்கும் 10000 பெண்களின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்திருக்கிறார். அவை அத்தனையும் வெந்நீர் ஊற்றுகளில் குளிக்கும் பெண்களை மறைந்திருந்து எடுக்கப்பட்டவையாகவே இருந்திருக்கின்றன.  

 

பெண்களை மறைந்திருந்து ரசிப்பதும் வீடியோ எடுப்பதும் அதனை விற்பனை செய்வதும் வாயூரிசம் எனப்படும் ஒரு வகையான குற்றச்செயலாகும்.  இம்மாதிரியான குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் உலகம் முழுவதும் ஒரு பெரும் கிரைம் நெட்வொர்க்காக செயல்பட்டு வருகிறார்கள். கரின் சைடோவும் அந்த நெட்வொர்க்கின் மூலமாகவே செயல்பட்டு வந்திருப்பதைக் கண்டுபிடித்த ஜப்பான் காவல்துறை குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்து தீவிரமாக விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.