Skip to main content

அம்மா உணவகத்தைப் போல் பொது நிவாரண நிதியை ஏன் அதிமுகவினரிடம் மட்டும் கேட்கவில்லை? - கோவி. லெனின் கேள்வி

Published on 25/04/2020 | Edited on 25/04/2020


உலகம் முழுவதும் கரோனா ஆட்டி படைத்து வருகின்றது. வல்லரசு நாடுகள் முதல் வளரும் நாடுகள் வரை அதன் பிடியில் இருந்து யாரும் தப்பவில்லை. உலக நாடுகள் எல்லாம் அதன் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கின்றன. இதற்கிடையே சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களும் இந்த நோயின் தாக்குதலுக்கு ஆளாகி பலியாகிறார்கள். இந்நிலையில், அம்மா உணவக விவகாரத்தில் அதிமுகவினர் அரசியல் செய்வதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதுபற்றிய நம்முடைய கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் பத்திரிகையாளர் கோவி. லெனின், அவரின் பதில் வருமாறு, 
 

 

 

kl


தமிழகத்தில் இந்தக் கரோனா விவகாரத்தில் அரசியல் செய்யப்படுவதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுகின்றது. எதிர்க்கட்சித் தலைவர் அனைத்துக்கட்சி கூட்டம் கூட்ட வேண்டும் என்றாலும் அதற்கு ஒரு தடை விதிக்கப்படுகிறது. ஆன்லைனில் கூட்டத்தை நடத்திக்கொள்ள சொல்கிறார்கள். கரோனா விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் அரசியல் செய்கிறார் என்று முதல்வர் குற்றம் சாட்டுகிறார். இந்தக் குற்றாச்சாட்டுக்களை எப்படிப் பார்க்கிறீர்கள்? 

தமிழகத்தைப் பொறுத்த வரையில் அனைத்திலும் அரசியல் செய்யும் நிலை தொடர்ந்து இருந்து வருகின்றது. நமக்கு இதில் எதாவது லாபம் இருக்குமா என்ற பார்வை அதிகம் இருக்கிறது. அது ஆளும் கட்சியா இருக்கிறவங்களுக்கு ரொம்ப அதிகமாக இருக்கிறது. அம்மா உணவகம் என்பது அரசாங்கத்தின் உதவியோடு நடைபெறுகின்ற ஒரு திட்டம். அதிமுக அரசு கொண்டுவந்த திட்டமாகவே இருந்தாலும் மக்களின் வரிப்பணத்தில்தான் அது நடைபெறுகின்றது. இப்போது முதல்வர் என்ன சொல்கிறார் என்றால், சேலம் மாநகராட்சியில் உள்ள அம்மா உணவகத்தில் அதிமுக சார்பில் உணவு வழங்கப்படும் என்று சொல்கிறார். அது ஏன் அதிமுக சார்பாகக் கொடுக்க வேண்டும். ஏற்கனவே முதல்வர் பொதுநிவாரண நிதி கொடுங்கள் என்று அனைவரிடமும் தான் கேட்டீர்கள், அதிமுகவினர் நிதி தாருங்கள் என்று கேட்வில்லை. எந்தக் கட்சியாக இருந்தாலும் நிதி கொடுத்தால் போதும் என்று கேட்டீர்கள். ஆனால், பொருளை எடுத்துக்கொடுக்கும் போது மட்டும் அதிமுக லேபிளை ஒட்டுகிறீர்கள்.
 

http://onelink.to/nknapp


எப்படிச் சென்னை செயற்கை வெள்ளம் ஏற்படுத்தப்பட்ட போது அனைவரிடமும் பெறப்பட்ட நிதியைக் கொண்டு வாங்கப்பட்ட பொருட்களுக்கு அம்மா ஸ்டிக்கரை ஒட்டினார்களோ அதே போல் அம்மா உணவகத்தை வைத்து தற்போது அரசியல் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். இந்தக் கரோனா தொற்று விவகாரத்திலும் அரசியல் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். இதுவரை கரோனா தொற்று சமூகப் பரவல் ஆகவில்லை என்று கூறிவந்தார்கள். தற்போது பத்திரிகையாளர்களுக்கு எல்லாம் கரோனா தொற்று ஏற்படுகின்றது. ஒரு ஊடகத்தில் இருக்கும் பத்து, இருபது நபர்களுக்கு கரோனா தொற்று எப்படிப் பரவியது. இதற்கான பதிலைக் கேட்டால், ஊடக விவாதத்தில் கூட உங்களுக்கு நோய்த் தொற்று இருக்கிறதா? என்று நம்மை அவர்கள் கிண்டல் செய்கிறார்கள். இப்போது அந்த ஊடக விவாதத்தைக் கூட செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கேரளாவிலும் அரசியல் இருக்கின்றது. ஆனால் இந்த நோய்த் தொற்றை வைத்து ஆளும் கட்சியினர் அரசியல் செய்யவில்லை. சில இடங்களில் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களும், எதிர்கட்சியைச் சேர்ந்தவர்களும் ஒன்றாகச் சென்று மக்களைச் சந்தித்துள்ளனர். மக்களைச் சந்தித்து அவர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்துவம், விழிப்புணர்வை ஏற்படுத்துவது மட்டுமே தற்போதைய தேவை. அதை விட்டுவிட்டு யார் பெரியவன் என்று அரசியல் செய்ய இந்த நேரம் உகந்த நேரம் இல்லை. மக்கள் கடும் மனக் குழப்பத்திலும், பணக் கஷ்டத்திலும் இருக்கிறார்கள். அதைப் போக்க அரசு முயற்சிக்க வேண்டும், என்றார்.