Skip to main content

'நீங்கள்தானே முடிவெடுக்க வேண்டும்... நீங்கள் யார் என்று'

Published on 23/09/2019 | Edited on 23/09/2019

எந்த கல்லூரியில் படிக்கச் சென்றாலும், எந்த இடத்தில் வேலைக்குச் சென்றாலும் அந்தக் கல்லூரியில் உள்ள புரஃபசர்ஸ்கிட்டே நல்ல பேர் வாங்குவதுபோல எப்படி படிப்பது, அந்த கம்பெனியில் நல்ல பேர் எடுக்கிறது மாதிரி எப்படி உழைப்பது என்றுதான் யோசிக்கிறோம். நாம் சாதிக்க என்ன செய்யவேண்டும் என்று எத்தனை பேர் சிந்திக்கிறார்கள். அந்த சிந்தனையில்தான் இருக்கிறது வெற்றியின் சாவி. உங்களுடைய வாழ்க்கைத்துறையை யார் தீர்மானிப்பது என்ற கேள்வியை உங்களுக்குள்ளேயே கேட்டுப் பாருங்கள். 
 

fxch



இன்று நீங்கள் படிக்கும் கோர்ஸையோ, நாளை நீங்கள் பார்க்கப் போகும் வேலையையோ யார் முடிவு செய்வது? நீங்கள்தானே முடிவெடுக்க வேண்டும். இந்த இடத்தில்தான் நம்முடைய நாட்டுக்கும் மேலைநாடுகளுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. இங்கே வெகுசில மாணவர்களுக்கே சின்ன வயதிலிருந்து, நாம் எந்தத் துறைக்குச் செல்லவேண்டும் என்ற தெளிவு இருக்கிறது. ஏனென்றால், அவர்களின் பெற்றோர் அது பற்றி பேசுகிறார்கள். அதற்கானத் தயாரிப்புகளை செய்கிறார்கள். பெரும்பாலான மாணவர்களுக்கு இந்த  வாய்ப்பு அமைவதில்லை. இன்ஜினியர் அல்லது டாக்டர் இரண்டே சாய்ஸ்தான். அதனால்தான் இந்தியாவில் எது ஈஸியா இருக்கணுமோ அது கஷ்டமாக இருக்கிறது. எது கஷ்டமாக இருக்கணுமோ அது ஈஸியாக இருக்கிறது.