தேர்தலுக்கு இன்னும் 14 நாட்களே உள்ளன. ஒருபக்கம் தேர்தல் பரப்புரை அனல் பறக்கிறதென்றால், இன்னொருபுறம் தேர்தல் பறக்கும் படை கைப்பற்றும் பொருட்களின் அளவு மலையாய் குவிகிறது.
கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் தேர்தல் ஆணையத்தால் கைப்பற்றப்பட்ட பொருட்களின் அளவு, இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி,
ஏப்ரல் 1ம் தேதி தமிழ்நாட்டில் மட்டும் 108.75 கோடி ரூபாய் ரொக்கமும், 93.36 கோடி ரூபாய் மதிப்புள்ள 738 கிலோ தங்கம் மற்றும் வெள்ளியும், 25 இலட்சம் மதிப்பிலான 9 ஆயிரம் லிட்டர் மதுபானங்களும், 25 இலட்சம் மதிப்பிலான போதைப்பொருட்கள், இலவசங்கள் மற்றும் பிறபொருட்கள் அந்தவகையில் ரூ.5.94 கோடி அளவுள்ள பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. ஏப்ரல் 1ம் தேதியில் மட்டும் மொத்தம் 208.55 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
ஏப்ரல் 2ம் தேதி 121.46 கோடி ரூபாய் ரொக்கமும், 884 கிலோ தங்கம் மற்றும் வெள்ளியும் இதன் மதிப்பு ரூ.135.19 கோடி. மேலும் 26 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள 10 ஆயிரம் லிட்டர் மதுபானங்களும், 25 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்களும், 5.96 கோடி மதிப்புள்ள இலவசங்களும், மற்ற பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. மொத்தம் 263.12 கோடி மதிப்பிலானவை கைப்பற்றப்பட்டுள்ளன.
ஏப்ரல் 3ம் தேதி 127.84 கோடி ரூபாய் ரொக்கமும், 135.6 கோடி மதிப்புள்ள 884 கிலோ தங்கம் மற்றும் வெள்ளியும், 26 இலட்சம் மதிப்புள்ள 10,000 லிட்டர் மதுபானங்களும், 26 இலட்சம் மதிப்புள்ள போதைப்பொருட்களும், 6.19 கோடி மதிப்புள்ள இலவசங்கள் மற்றும் பிறபொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. மொத்தம் 270.15 கோடி மதிப்பிலான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கடந்த 3 நாட்களில் மட்டும் மொத்தம் 358.05 கோடி ரூபாய் ரொக்கமும், 364.15 கோடி மதிப்புள்ள 2,506 கிலோ தங்கம் மற்றும் வெள்ளியும், 77 இலட்சம் மதிப்புள்ள 29 ஆயிரம் லிட்டர் மதுபானங்களும், 76 இலட்சம் மதிப்பிலான போதைப்பொருட்களும், 18.09 கோடி ரூபாய் மதிப்பிலான இலவசங்கள் மற்றும் பிறபொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. கடந்த மூன்று நாட்களில் கைப்பற்றப்பட்டவைகளின் மொத்த மதிப்பு ரூ.741.82 கோடி.